பட்டூரா

தேதி: December 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. மைதா மாவு - 250 கிராம்
2. சர்க்கரை (சீனி) - 1 தேக்கரண்டி
3. டிரை ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
4. உப்பு
5. நெய் - 1 மேஜைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, ஈஸ்ட், உப்பு, நெய் கலந்து, வெது வெதுப்பான நீர் சேர்த்தி சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.
இதை ஈர துணியில் சுற்றி 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் மாவை 10 உருண்டைகளாக பிரித்து பூரி போல் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


இதை குருமா (அ) சன்னா மசாலாவோடு பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஈஸ்ட் சேர்த்து செய்ததில் சூப்பர்.

நல்லா சாப்ட்'அ இருந்துச்சா மேனகா? :) மிக்க நன்றி. சூப்பர்'னு கேட்க சந்தோஷமா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா