இன்ஸ்டண்ட் ரசகுல்லா

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மில்க்மெயிட் - 200 கிராம்
பனீர் - 250 கிராம்
முந்திரிபருப்பு - 10
பாதாம்பருப்பு - 12
பிஸ்தாபருப்பு - 6
உலர்ந்த திராட்சை - 10
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 4
குங்குமப்பூ - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் பனீரை நன்கு உதிர் உதிராக உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை ஆகிய நான்கிலும் முக்கால் பாகத்தை போட்டு மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் பனீரையும், மில்க்மெய்டையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
கலவை நன்கு கெட்டியானவுடன் வறுத்து வைத்துள்ள பருப்புகளை போட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
குலோப்ஜாமுன் பாகு பதத்தில் இருக்க வேண்டும். இதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு அதோடு மீதியுள்ள பருப்புகளை போட்டு குங்குமப்பூவையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை இதில் போடவும். நன்கு ஊறிய பின் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்