தேவா மேடம், Pls Help Me..

தேவா மேடம்,

தங்களின் அழகு குறிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் அனைத்து குறிப்புகள் மற்றவர்களுக்கு
பயன் அளித்துள்ளீர்கள்.எனக்கும் உதவுவீர்கள் என நம்பி என் பிரைச்சனைக்கும் தங்களால் முடிந்த
உதவியை செய்வீர்கள் என நம்புகிறேன்.

எனக்கு கடந்த மூன்று வாரங்களாக தீடீரென்று கை மற்றும் கால்களில்
சிறு சிறு கொப்பளங்களாக வந்து அரிப்பு தாங்க முடியல. டாக்டரிடம்
சென்று treatment்,ரத்தம் எல்லாம் பரிச்சோதித்து விட்டாச்சி,ரத்தம் எல்லாம் சுத்தமாக இருக்கு
,antibiotic and allagic மருந்தை கொடுத்தனர், injectionனும் போட்டனர்.
ஆனால் இன்னும் அரிப்பு நின்ற பாடில்லை. அரிப்பும் தாங்க முடியல.
எங்கடா உடம்பு முழுவதும் வந்துவிடுமோனு பயமாகவும்,கவலையுமாக இருக்கு.
அருசுவை தோழிகளே, தங்களுக்கு யாருக்காவது தெரிந்த வைத்தியம் இருந்தால் தயவு செய்து கூறவும்.

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

மேலும் சில பதிவுகள்