சிக்கன் கைமா ரொட்டி

தேதி: December 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு/பிரெட் மாவு - 200கிராம்
கோழி இறைச்சி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறித்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு தூளாக அரிந்தது - ஒரு மேசைக்கரண்டி
(இஞ்சி பூண்டு விழுது உபயோகித்தால் - ஒரு தேக்கரண்டி)
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - 2 தேக்கரண்டி


 

சிக்கனை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தவாவில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு கறித்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து உப்பு போட்டு பிரட்டி விடவும்.
இந்த சிக்கன் கலவையுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை பிரட்டி விடவும்.
சிக்கன் வெந்ததும் இறக்கி வைத்து அதனுடன் மாவை சேர்த்து கலந்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய சிறிய ரொட்டிகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் கைமா ரொட்டிகள் தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த சிக்கன் கைமா ரொட்டி இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் கைமா ரொட்டி சூப்பர்.
எங்க வீட்டில் எல்லோரும் டேஸ்ட் பார்த்தோம்.அழகாக பரிமாறி இருக்கீங்க,நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா,
மிக்க நன்றி.
நான் செல்வியக்காவின் மட்டின் கைமா ரொட்டி முறையைப் பார்த்து, அதேபோல் சிக்கினுடன் செய்தேன். நன்றாகவே இருந்தது... பிளேன் ரீக்கு சூப்பர்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
மிகவும் அருமையாக இருக்கின்றது. இதனை சப்பாத்தி் போல் செய்தால் அதே போல் இருக்குமா?பார்க்வே ஆசையாக இருக்கு.

அன்பு அதிரா,
வாவ்!! சூப்பரா செய்து படம் எடுத்திருக்கே! பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு. கலர்ஃபுல்லாகவும் இருக்கு. பாராட்டுக்கள் அதிரா.
ஆன்லைனிலா? மெயில் பார்த்தியா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.சாப்பிடனும் போல இருக்கு.செய்து பார்க்கிறேன்.எனக்கு கொஞ்சம் செய்து அனுப்பி வைங்க.எதற்க்கா சாப்பிடத்தான்.

மிக்க நன்றி
கீதாச்சல், இது கொஞ்சம் சின்னதாக செய்திருக்கு, நீங்கள் விரும்பினால் சப்பாத்திபோலும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன்.

செல்வியக்கா, நீங்கள் "அருமை அதிரா" என்றதும் நான் என்னைத்தான் சொல்லுறீங்களோ என்று ஓடி வந்தேன்... ரொட்டியையா சொன்னனீங்கள்?:(, பறவாயில்லை இது நான் சுட்ட ரொட்டிதானே....

நன்றி மேனகா, உடனேயே அனுப்பிட்டேனே:) கிடைத்ததோ எனச் சொல்லிப்போடுங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா நலமா? படத்தோடு செய்து காட்டி எங்களையும் செய்யத் தூண்டிவிட்டீர்கள். செய்து பார்த்தேன் நல்ல டேஸ்ட்டாக வந்தது. நன்றி அதிரா. ரெஸிபி தந்த செல்விம்மாவிற்கும் நன்றி. நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவரா அதிரா? நானும் இலங்கையைச் சேர்ந்தவர்தான்.

அன்புடன் ரிகா.

ரிகா, செய்துபார்த்து பதிலும் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நானும் இலங்கைதான். உங்களை அறுசுவையில் எங்கேயும் கண்டதாக எனக்கு நினைவில்லையே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க? நான் அருசுவையில் 1 வருடத்துக்கு முன்பே இணைந்த்துள்ளேன். அப்பப்போ கேள்விகள் கேட்பேன். பின்னூட்டம் அனுப்புவேன் அத்தோடு சரி. உங்கள் எல்லோரையும் நல்லாத்தெரியும். எப்படின்னா அருசுவையை வழமையாகப் பார்ப்பேன். அரட்டையில் கலந்துக்க ஆசைதான் பட் இப்போ குழந்தையோட கஷ்டமாயிருக்கு.( 9 மாதம்) ஸோ ரொம்பவே குழப்படி பண்ணுகிற வயசு. சீக்கிரமா அரட்டைக்கு வருவேன் .

அன்புடன் ரிகா.