பனீர், உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா

தேதி: December 19, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பனீர் - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 2,
பச்சை பட்டாணி - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி -1,
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2 ,
ஏலக்காய் - 2,
கொத்தமல்லி தழை - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய சதுரங்களாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இறக்கி ஆறவிட்டு, மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.
பிரஷர் பேனில் மீதி எண்ணெயை விட்டு இஞ்சி பூண்டு விழுது, பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இரண்டு டம்ளர் சேர்த்து, மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
குக்கரை திறந்து பனீர் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்