சேப்பங்கிழங்கு ரோஸ்ட் 2

தேதி: December 19, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ,
கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய் -3 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

சேப்பங்கிழங்கை அரிசி கழுவிய நீரில் வேக வைத்து தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
(தேவைப்பட்டால் சிறிது புளியும் சேர்த்து வேக வைக்கலாம்).
கடலைபருப்பு, தனியா, பெருங்காயம்,காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
வறுத்தவற்றை ஆறியதும், உப்பு சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் பொடிக்கவும்.
பொடித்த பொடியை கிழங்கில் பிசிறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பிசறிய கிழங்கைப் போட்டு சிறு தணலில் வைத்து மொறுமொறுப்பாக வரும் வரை கிளறி இறக்கவும்.


தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்