மினஸ்ட்ரோன் சூப் (Minestrone Soup)

தேதி: December 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கின காரட் – ஒரு கப்
பொடியாக நறுக்கின செலரி(Celery) – ஒரு கப்
பூண்டு – 2
தக்காளி சாஸ் ( இத்தாலியன் ஸ்டைல்) – ஒரு கப்
ஸ்விஸ் சார்ட்(Swiss Chard -இது ஒரு வகை கீரை) – ஒரு கப்
சுக்கினி – ஒன்று
செல் பாஸ்தா – அரை கப்
பிண்டோ பீன்ஸ்(Pinto Beans) – ஒரு கேன்
பே லீஃப் (Bay Leaf) – 2
உப்பு – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
ஃபார்மஜான் சீஸ் – 2 தேக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள காரட் மற்றும் செலரியை சேர்த்து வதக்கவும். இதனுடன் காரட் மற்றும் செலரிக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு பூண்டினை நசுக்கி அதில் போடவும். இப்போது அதனுடன் இத்தாலியன் ஸ்டைல் சாஸ் மற்றும் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து கிளறி விடவும். இத்தாலியன் ஸ்டைல் சாஸ் இல்லையென்றால் ப்ளைன் தக்காளி சாஸுடன், பேசில்(basil), பார்ஸ்லி இலை(parsely leaf) மற்றும் ஒரெகானோ(oregano) சேர்க்கவும்.
5 நிமிடம் கழித்து ஸ்விஸ் சார்ட், செல் பாஸ்தா, பே லீஃப், சுக்கினி, உப்பு, மிளகு தூள் எல்லாவற்றையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் அரை மணி நேரம் மிதமான தீயில் வைத்து வேக விடவும். வெந்ததும் பிண்டோ பீன்ஸை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
பீன்ஸ் நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும். பரிமாறும் போது அதன் மேல் சிறிது ஃபார்மஜான் சீஸை தூவி பரிமாறவும்.
சுவையான மினஸ்ட்ரோன் சூப் தயார். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

இந்த சூப்பை மிக குறைந்த அளவு தீயில் சுமார் 2 மணி நேரம் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.(Slow cooking)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கீதா மினஸ்ட்ரோன் சூப் போன வாரம் செய்தேன். வெளியில் சாப்பிடுவது போன்றே சுவை. மிக்க நன்றி!

மிகவும் நன்றி மாலி. இதனை நான் ஆலிவ் கார்டனில் சாப்பிட்டு அதே சுவையில் வீட்டில் சமைக்க வேண்டும் என்று சிறிதளவு அதே சுவைவருமாறு கற்று கொண்டது.
அன்புடன்,
கீதா ஆச்சல்