மஸ்ரூம் கார்ன் காப்சிகம் சூப்.

தேதி: December 20, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஸ்ரூம் - 100 கிராம்
உதிர்த்த கார்ன் - ஒரு கைப்பிடி
(ஃப்ரோசன் கார்ன் அல்லது வேகவைத்தது)
கேப்சிகம் - 1
சூப் ஸ்டாக் - 1 க்யூப்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெப்பர் - அரை ஸ்பூன்
சோயா சாஸ்- 1- 2 டீஸ்பூன்
வெங்காயம் - சிறியது 1
எண்ணெய் அல்லது பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்


 

மஸ்ரூம், கேப்சிகம், வெங்காயம் கட் பண்ணி வைக்கவும்.
ஒரு லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் சூப் கியூப், மஸ்ரூம், கேப்சிகம், கார்ன் போட்டு வேக வைக்கவும்.
வெந்த பின்பு, மைதா, கார்ன் மாவு, தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கெட்டியாகி வரும் சமயம், சோயா சாஸ், பெப்பர், தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது பட்டர் விட்டு கட் பண்ணிய வெங்காயம் வதக்கி சூப்பில் கொட்டவும்.
சூடான, சுவையான மஸ்ரூம் கார்ன் கேப்சிகம் சூப் ரெடி.


சூப் கியூப்(சிக்கன்,வெஜிடபிள் ஸ்டாக்) விருப்பப்பட்டால் சேர்க்கவும். இதில் உப்பு இருக்கும். எனவே பார்த்து உப்பு சேர்க்கவும். இந்த சூப் க்ரீம் கலரில் இருக்கும். விருப்பப்பட்டால் முட்டை வெள்ளைக்கரு கூட அடித்து சூப்பில் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியாக்கா,
இந்த மூணுக்”கா”(காளான், கார்ன், காப்சிகம்)சூப் ரொம்ப நல்லா இருந்தது. நல்லா இருக்கென்று பாராட்டும் கிடைத்து. நன்றி. நான் ப்ளுரோட்டஸ் காளான் யூஸ் பண்ணி செய்தேன். அடுத்த முறைதான் பட்டன் உபயோகிக்க வேண்டும். நிச்சயம் ரெண்டுக்கும் சுவை வேறுபடும். செய்து விட்டு மீண்டும் சொல்கிறேன்க்கா.
உங்களை அக்கான்னு கூப்பிடும் போது உங்க வயசு, திறமை, அனுபவம் மேலும் (etc.,)எல்லாத்தையும் கொஞ்சம் குறைத்து சொல்வது போல் உள்ளது. (apart from closeness and familiarity with each other).

indira

செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மகிழ்ச்சி.ப்ளுரோட்டஸ் காளான் புதிதாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.