செட்டிநாடு பெப்பர் சிக்கன்

தேதி: December 21, 2008

பரிமாறும் அளவு: 6- 8 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சிக்கன் - முக்கால் கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4 (வறுத்து அரைக்க) + 4 (தாளிக்க)
மிளகு - 1/2 டீஸ்பூன் (தாளிக்க), ஒன்றரை ஸ்பூன் மிளகு - வறுத்து அரைக்க.
முழுமல்லி - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல் (சிறியது தாளிக்க)
கறிவேப்பிலை - 3 இணுக்கு


 

சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும். உப்பு, மஞ்சள்தூள், தயிர், இஞ்சி பூண்டு போட்டு பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
மிளகு, மல்லி, சீரகம், வற்றல் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் ஊறிய சிக்கனை போடவும். சிக்கனிலேயே தண்ணீர் விடும், வற்றி 15 நிமிடத்தில் வெந்துவிடும். பின்பு வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து பிரட்டவும். 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.
திரும்ப ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மிளகு, பூண்டு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து சிக்கன் மேலே கொட்டவும். இது பார்ப்பதற்கு அழகாகவும்,மணமாகவும் இருக்கும்.
சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.


தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் பிரியாணி, புலாவ் வகைகள், கட்டு சாதம், சாம்பார், தயிர் சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் சுவையாக இருந்தது ஆசியா. மிக்க நன்றி. பருப்பு ரசமும் இதுவும் சம காம்பினேஷன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி..உங்க பின்னூட்டதை பார்த்து என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நேற்றிரவு இந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்தேன்.அருமை என்று சொல்ல கூடாது.அருமையோ அருமை என்று தான் சொல்லனும்.அவ்வளவு சூப்பரான ரெசிப்பி மேடம்.ஆனால் நான் கொஞ்சம் காரம் குறைத்து தான் போட்டேன்.என் மகளுக்காக காரம் குறைவா போட்டேன்.நேற்று இரவு சமைத்த பிஸ்மில்லாபாத்துக்கு இதான் சைடிஷ்.

என் கணவரே இது அஞ்சப்பர் ஹோட்டலில் சாப்பிடுகிற டேஸ்ட் இருக்கேன்னு சொன்னார்.இனிமேல் சிக்கன் வாங்கினால்,இதே மாதிரி தான் சமைத்து தரனும் என்பது அவரது ஆர்டர்.அந்தளவுக்கு எங்களுக்கு பிடிச்சு போச்சு.உங்களின் இந்த குறிப்புக்கு மிக்க நன்றி.

உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்வைத்தருகிறது.சுகன்யா நீங்க ராஸ் அல் கைமாவிலா இருக்கீங்க.நான் அடிக்கடி வந்து போன ,தங்கிய ஊர்.என் அண்ணன் mr.kalanthar கிட்ட தட்ட அங்கு 11 வருடம் இருந்திருக்காங்க,rak indian school -principal 7 years,scholars indian school ஆரம்பிக்க அதன் கரஸ்பாண்டண்ட் கேட்டதால் அங்கு அந்த புது ஸ்கூலை டெவெலப் பண்ண 4 வருடம் pprincipal ஆக இருந்தாங்க.முதலில் அபுதாபியில் தான் இருந்தாங்க.இப்ப சார்ஜாவில் இருக்காங்க.eta star international school - directer of education இப்ப இருக்காங்க.நீ கேள்வி பட்டு இருக்கியா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் ரஸ்-அல்-கைமாஹ்வில் தான் இருக்கேன்.நீங்களும் இங்கு வந்து தங்கியிருக்கீங்களா?ரொம்ப சந்தோஷமா இருக்கு.அப்படியா மேடம் உங்க அண்ணன் இந்தியன் ஸ்கூலில் பிரின்ஸிப்பாலாக இருந்தவரா!என் மகளை இந்த Indian Schoolலில் தான் சேர்த்து இருக்கோம்.அடுத்த மாதம் பள்ளிக்கு செல்லவிருக்கிறாள்.Scholars Indian school கூட கேள்விப்பட்டிருக்கிறேன், இங்கிருந்து கூட சில பிள்ளைகள் செல்கிறார்கள்.ஆனால் பஸ் வசதி காரணமாக பெரும்பான்மையானவர்கள் இந்த Indian Schoolல் தான் சேர்க்குறாங்க.அதான் இந்த ஸ்கூலிலேயே சேர்த்திடலாம்னு சேர்த்துட்டோம்.தங்களிடம் இப்படியொரு தகவல் பரிமாற்றம் செய்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

ஆசியா நேற்று உங்க செட்டி நாடு பெப்பர் சிக்கன் செய்தேன். எங்க வீட்டு கோழிபிரியருக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி!

மிக்க மகிழ்ச்சி.நன்றி .இந்த குறிப்பை யாரும் சமைக்கலாமில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்களுடனும் கொடுத்து இருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.