சிக்கன் விங்க்ஸ் ரோஸ்ட்

தேதி: December 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. சிக்கன் விங்க்ஸ் - 12
2. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
3. சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
4. கொத்தமல்லி இலை - 1/2 கப்
5. பச்சை மிளகாய் - 6
6. தயிர் - 3 மேஜைக்கரண்டி
7. உப்பு


 

சிக்கன் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி போட்ட பாத்திரத்தில் இரவு முழுதும் ஃபிரிஜில் வைத்து ஊர வைக்கவும்.
இதை வழக்கம் போல் அவனில் வைத்து பேக் செய்யவும். (375 'ல் முர்சூடு செய்து, 35 நிமிடம் வைக்கவும்)
பின் வெளியேரிய நீரை நீக்கி 5 நிமிடம் கிரில் செய்யவும். (இடையில் திருப்பி விடவும்)


மேலே எலுமிச்சை பிழிந்து சாப்பிட சுவையாக இருக்கும். இதே போல் கோழி காலிலும் செய்யலாம். ஆனால் வேக சிறிது கூடுதல் நேரம் வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்