புளித்ததோசை மாவில் இஞ்சி தோசை

தேதி: December 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளித்த தோசைமாவு - 2 கப்
இஞ்சி - 2 இன்ச் துண்டு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 2 இனுக்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

இஞ்சியை தட்டி சாறு எடுத்து தோசை மாவுடன் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, பொடியாக நறுக்கிய மிளகாய் வற்றல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும்.
உப்பு தேவைப்பட்டால் கலந்து நன்றாக கலக்கி மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும். மணமான இஞ்சி தோசை ரெடி


தோசை மாவு அதிகம் புளித்து விட்டால் சாதாரண தோசையாக செய்தால் சாப்பிட முடியாது. வீணாக்கவும் மனது வராது. இது அதற்கு நல்ல மாற்று வழி.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி, இந்த தோசை இஞ்சியின் மணத்துடன் மிகவும் நன்றாக இருந்தது. பழைய மாவு போலவே தெரியவில்லை:) நன்றி உங்களுக்கு

வின்னி எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாளாச்சு!
இஞ்சி தோசை நல்லா இருந்ததா? எல்லாம் அம்மாகிட்ட கத்துக்கிட்டதுதான்.எனக்கு இந்த தோசை ரொம்ப பிடிக்கும். அதற்காகவே கொஞ்சம் மாவை தனியே எடுத்து புளிக்கவைத்து இதை செய்வேன் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!