ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

எனக்கு நேத்து நைட்ல இருந்து ஒரே இருமல்பா. என்ன செய்யன்னு தெரியலை. நைட் அம்மா சுக்கு, மிளகு, மஞ்சள்தூள் கலந்த பால் கொடுத்தாங்க நல்லாயிருந்தது. மறுபடியும் இப்போ 5 மணிக்கு இருமல் ஆரம்பிச்சிடுச்சு. ஏதாவது இதுக்கு மருந்து இருந்தா சொல்லுங்கப்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சுத்தமான தேன் 1டீ ஸ்பூன் சாப்பிடுங்கள்.இருமல் சரியாகும்

ஹாய் உமா,
பனை கல்கண்டு (jaggery) 1 ஸ்பூன் கழுவி அப்பப்போ வாயில் சப்பினால்,உமா,இருமல் சரியாகும்.
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

என் உயிரினும் மேலான தமிழ்நாட்டு , சீ.. என் நெஞ்சில் குடியிருக்கும்..நோ நோ ..என் இனிய ...
அடச்சீ சுரேஜினி ஏன் இந்த பிதற்றல்??

இந்தியா வரப்போறேன்.சுத்திமுத்தி பாக்கறதுக்கு.அரட்டை அரசிகளா கொஞ்சம் கைகுடுங்கோ.
கேள்விகளை நானே கேட்கிறேன்.
1.என் கணவரின் உறவினர் வீட்டில் தங்கப்போகிறேன்.அதற்கு நான் மாதம் எவ்வளவு பணம் கொடுத்தால் போதுமானது?[சென்னை மடிப்பாக்கம்]

2.ஒரு பவுண் என்ன விலை போகிறது?

3.என்ன கிவ்ட் வாங்கி கொண்டுபோலாம்?[2வயதானவர்கள் 50,55]

4.எலட்றிக் முறையில் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை களையலாம் என்று இருக்கிறேன்.அது எங்கே செய்வது?

மீதி கேள்வி முடிந்தால் அங்கிருந்து கேட்கிறேன்.

சுரேஜினி

சித்தி, பஜீலா ரொம்ப நன்றி. நான் இதை டிரை பண்ணிப் பார்க்கிறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

என்ன உமா கர்ப்பிணிபெண் இருமிக்கொண்டு இருக்கலாமா?சட்டு புட்டுண்ணு வைத்தியம் பாத்து குணப்படுத்துங்கோ.சரி இருமும்போது வயித்ல தடவி விடுங்கோ.எங்கேயோ கேட்டது.நானும் எங்காவது தேடிப்பாக்கிறன் ஏதாவது ஈசி வைத்தியம் இருக்கா எண்டு.

சுரேஜினி

சுரேஜினி உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும். போயிடாதீங்க. என் ஹஸ் கிட்ட பேசிகிட்டு இருக்கேன். இருங்க வரேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அடடே சுரேஜினி... நம்ம ஏரியா பக்கம் போறீங்க.... முகத்துக்கு பக்கதுல வேளச்சேரி டான்சி நகர் LAKME beauty saloon (near vijayanagar bus terminus) போங்க. என் பேரை சொல்லுங்க, நல்லா செய்து விடுவாங்க. hihihi.. ;) எல்லாம் நம்ம ஃபிரென்ட்ஸ் தான். தங்கம் கன்னாபின்னான்னு ஏறுது இரங்குது... இப்பொ என்ன நிலையோ!!! சொந்தகாரங்க வீட்ல தங்க பணமா??!!! புரியல !! :( க்லியரா சொல்லுங்க.... எவ்ளோன்னு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

எங்கயோ தேடி கொண்டு வந்த்துட்டமுல்ல.

வனிதா நீங்க சொன்ன இடம் நோட் பண்ணீட்டன்.ஓமப்பா எனக்கு சும்மா தங்க விருப்பம் இல்ல.வெளிய எவ்வளவு மாச வீட்டுவாடகை போகிறதோ அவ்வளவை அவர்களுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தே ஆகுவேன்.அப்பிடி கொடுக்காம கண்ட கண்ட கிவ்ட்டையும் வேண்டிக்குடுத்துக்கொண்டு இருக்க விருப்பமில்ல.நாங்கள் எங்கட தனிப்பட்ட தேவைக்குதான் போறம்.[நான்+ஹஸ்] அதனாலதான் வனிதா கேட்டேன்.
இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

சுரேஜினி

அய்யோ என் அறிவு சுரேஜினியே நன்றி.ஆனால் இப்ப வீட்டில் தேனும் இல்லை. பனங்கற்கண்டும் இல்லை. அதான் அம்மா கொடுத்த மிளகுப்பாலை குடித்துக் கொண்டே ஒரு கையில் வேலை செய்கிறேன்.

அப்புறம் சுரேஜினி எதுக்குப்பா தங்கத்தோட விலை. ஏன் நீங்க நிறைய தங்கம் வாங்கிட்டு வரப்போறீங்களா? (எல்லாரும் வாங்கப்பா நம்ப சுரேஜினி நமக்காக தங்கம் வாங்கிட்டு வாராங்க) எனக்கு அதிக ஆசையெல்லாம் இல்லை. சும்மா ஒரு 10 பவுன் மட்டும் வாங்கிட்டு வாங்க ஹா ஹா ஹா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்