ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

சரி சரி மிளகுப்பாலோ என்னமோ குடிச்சு முதல் இருமலை துரத்துங்கோ.ம்ம் நான் ஆசப்பட்டு தங்கம் வாங்கினதே இல்ல உமா.ஆனா இப்பிடித்தான் விலை அதிகரிக்கும்போது விக்கலாம் எண்டு வேண்டி வச்சா எப்ப வீட்டில வைக்கிறமோ அண்டக்கு கதவ உடச்சு கொண்டு போயிடுவாங்கோ.என்னோட திருமணத்துக்கு 1மாசம்முதல் எல்லாமே திருட்டுப்போச்சு. அப்போ நாங்கள் 4 பெண்கள் வீட்டில் ஒரு தோடுகூட மிச்சம் விடேல்ல.இது தெரிந்து திருமணத்தன்று எல்லாருமே வில்லங்கத்துக்கு தங்கத்தால என்ன ஜோடிச்சு விட்டிட்டாங்கோ இப்ப நான் கடன்காரி.குடுக்கும்வரைக்கும் உறுத்திக்கொண்டுதானே இருக்கும்.அதனால இங்க விட இந்தியால விலைகுறைவா இருந்தா வாங்கி வச்சு அவயள் கொண்டாட்டம் செய்யேக்க கடனை அடைக்கலாமில்லா.= லாபம்

உமா உங்களுக்கு இல்லாததா நம்ம ஆத்துல திருடின திருட்டுக்கும்பல கண்டு புடிச்சு நீங்களே வேண்டி எடுத்துக்கொள்ளுங்கோ.

சுரேஜினி

என்னப்பா சொல்றீங்க உண்மையா திருடிட்டாங்களா? அப்போ எந்த நாட்டில் இருந்தீங்க.
நீங்களெல்லாம் என்ன பண்ணீங்க. என் கிட்ட பத்திரமா கொடுத்து வச்சிருந்தா உங்களுக்கு ஏன் இந்த பிரச்சனை?!!!?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

செல்வி மேம் இன்னிக்கி நான் உங்களுக்கு போன் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா உங்களை நினைச்சா பாவமா இருந்தது அதான் விட்டுட்டேன். ஏன்னா தொண்டை கர கரன்னு இருக்கு இருமல் வேறு. அப்புறம் நீங்க பயந்திடுவீங்க அதான் (பாருங்க நான் எவ்வளவு நல்லவன்னு!!!).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அன்பு சுரேஜ்,
நலமா?
இங்கே தான் தங்கம் விலை இப்ப ஜாஸ்தின்னு நினைக்கிறேன். ஒரு கிராம் ஆயிரத்து நூறில் இருந்து 1200 க்குள் ஊஞ்சலாடிகிட்டே இருக்கும் தினம் தினம். (உமா, ரெண்டும் ஒண்ணு தான்)

பேயிங் கெஸ்ட்னா, மாசம் 4000 வரை கொடுக்கலாம்(சாப்பாடும் சேர்த்து).
உங்கள் எண்ணம் சரியே.
வயசாவங்கன்னா, வீட்டிலேயே பிபி, சுகர் டெஸ்ட் பார்க்கிற கிட் கூட வாங்கித் தரலாம்.
அப்படியே பாண்டிச்சேரி இரண்டு நாள் டூரில் வந்து செல்விக்கா வீட்டில் இருந்து சுற்றலாம்:-)(உண்மையான அழைப்புப்பா).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
நான் ஆன்லைனில் வந்தது எப்படி தெரிஞ்சுது? மதியம் ஆபீஸ் போகலை. வீட்டில் தான் இருந்தேன். போன் வரும்னு பார்த்தேன். கிறிஸ்துமஸ் ட்ரீ வைத்துக் கொண்டு இருந்தேன். ஒருவழியா இப்பத்தான் முடிஞ்சது. சரி, கிறிஸ்துமஸ்ஸுக்கு எங்க வீட்டுக்கு வா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பார்த்தீங்களா நீங்கள் ஆன்லைனில் வந்ததை மோப்பம் பிடிச்சிட்டேன் (நம்ம அறிவை இங்க யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க).

மேம் கூப்பிட்டா நான் வந்திடுவேன்.

நான் இப்போ தான் எதேட்சையா மெயில் பார்த்தேன். உங்கக்கிட்ட இருந்து வந்திருந்தது. சரி நாளைக்கு பேசலாம் என்று நினைத்தேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

செல்வி மேம் போட்டாவில் மட்டுமல்ல உங்கள் எழுத்தில் தெரிகிறது உங்கள் சுறுசுறுப்பு அதான் அம்மா கிட்ட அப்படி சொன்னேன். அம்மா கூட துரு துருன்னு தான் இருப்பாங்க. ஆனா வேலை முடிஞ்சதும் டி.வி. பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஐயோ, தாங்கலைப்பா! அறிவு ஜீவி, நல்ல பொண்ணு இப்படி எத்தனை உனக்கு நீயே சொல்லிப்பா, என்ன சாப்பிட்டே இருமல் வர. பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குடி. ஐந்தாறு மிளகை வாயில் அடக்கி கொள். இருமல் வராது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அய்யோ அதை ஏன் மேம் கேட்குறீங்க 2 நாள் தொடர்ந்து ஐஸ்கிரீம் எங்கம்மா ஆசையா வாங்கி தந்தாங்கன்னு (நான் கேட்டதால் தான்) சாப்பிட்டேன். இப்போ பெரிய அவஸ்தையா இருக்கு.என் ஹஸ் கேட்டதுக்கு எல்லாம் உங்களால் தான் என்னை பழம் சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னீங்கள்ள அதான் உடம்பு ரொம்ப குளிர்ச்சியாயிடுச்சுன்னு பழியை அவர் மேல தூக்கிப் போட்டுட்டேன்.மனுஷன் நான் எது சொன்னாலும் நம்புறார் என்னை என்ன செய்ய சொல்றீங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நான் டிவியே பார்க்க மாட்டேன். எனக்கு பிடிக்காது. ஏதாவது செய்துகிட்டே இருக்கணும். இல்லைன்னா, பிசில இருப்பேன். இப்ப வீடு அடுக்கும் வேலையும் இன்னும் முடியலை. இன்னும் தூங்கப் போகலையா? இங்க பையன் இப்பதான் வந்தான். சாப்பிட கொடுத்த பின் தான் தூங்கப் போகணும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்