முட்டையில் அழகிய கிறிஸ்துமஸ் தாத்தா(santa claus) செய்வது எப்படி?

தேதி: December 22, 2008

4
Average: 4 (6 votes)

இந்த அழகிய, எளிதில் செய்யக் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தாவை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர், திருமதி. ஜீவா மோகன் அவர்கள். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட இவர். உணவுச் சத்துக்கள் குறித்து ஏராளமாக படித்தவர். சமையலில் மட்டுமல்லாது பின்னல் வேலைகள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் இவை அனைத்திலும் அதிக ஆர்வம் உள்ளவர்.

 

முட்டை - ஒன்று
பஞ்சு
பெவிக்கால்
ப்ரஷ்
சிவப்பு வெல்வெட் பேப்பர்
ஃப்பரிக் கலர்(வெள்ளை மற்றும் சிவப்பு)
கருப்பு பொட்டு - 2

 

முட்டையில் சிறு துளையிட்டு அதிலுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை எடுத்து விடவும். மேலே கூறிய மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் இரண்டு துளி வெள்ளை நிறக் கலர் மற்றும் ஒரு துளி சிவப்புக் கலர் சேர்த்து கலந்துக் கொள்ளவும். கலந்த பிறகு பிங்க் கலர் கிடைக்கும்.
கலந்து வைத்திருக்கும் பிங்க் கலரை ஒவல் வடிவத்தில் இருக்கும் முட்டையின் ஒரு பக்கத்தில் பிரஷ்ஷால் பெயிண்ட் செய்து காய விடவும்.
சிவப்பு நிற வெல்வெட் பேப்பரை கோன்போல் சுருட்டி அதன் ஒரங்களை ஒட்டி விடவும்.
செய்து வைத்திருக்கும் கோனை முட்டையின் மேல் பகுதியில் வைத்து பெவிக்காலால் ஒட்டவும்.
பஞ்சை சிறிதளவு எடுத்து தொப்பிக்கு அடியில் கம் தடவி அதில் ஒட்டவும்.
மேலும் சிறிதளவு பஞ்சை எடுத்து முகத்தின் இரு புறமும் கம் தடவி ஒட்டவும்.
பிறகு தாடி செய்வதற்கு சற்று அதிகமாக பஞ்சை எடுத்துக் கொண்டு 'V' வடிவில் செய்து அதை தாடிப் போல் ஒட்டவும்.
சிறிய அளவில் பஞ்சை எடுத்து திரித்துக் கொண்டு தாடிக்கு மேல் மீசைப் போல் ஒட்டி இரண்டு முனைகளையும் சுருட்டி விடவும்.
சிவப்பு நிறப் பெயிண்டை வைத்து மீசையின் கீழே உதடுப் போல் வரையவும்.
பிறகு சிறிய அளவு பஞ்சை எடுத்து மெல்லியதாக சுருட்டி புருவம் போல் செய்து ஒட்டவும்.
இரண்டு புருவங்களுக்கு கீழே கருப்பு பொட்டை ஒட்டவும். தொப்பி முனையில் கால் இஞ்ச் அளவு மடக்கி விட்டு பஞ்சை உருண்டையாக உருட்டி தொப்பியின் நுனியில் ஒட்டவும்.
க்ளேவைக் கொண்டு மூக்கு போல் செய்து மீசைக்கு மேல் வைத்து ஒட்டவும். கிறிஸ்துமஸ் நேரங்களில் குடிலை அலங்கரிக்க அழகிய எளிதில் செய்யக்கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஜீவா அவர்களுக்கு,
மிகவும் அருமையாக இருக்கின்றது.
நன்றி.

கீதா ஆச்சல்

ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்... ரொம்ப அருமையா இருக்கு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா என்ன ஒரு Creativity!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ஹலோ ஜீவா மேடம்,
Santa Claus மிகவும் அழகாய், க்யூட்டாய் இருக்கின்றது :-).
அன்புடன் விசா

மிக அழகாக இருக்கிறது ஜீவா. (அதிலும் தாத்தாவின் மீசை க்யூட்.) :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகாக இருக்கிறது ஜீவா செய்து பார்க்கிறேன்.

simi

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta