கிட்ஸ் துவரம் பருப்பு புட்டு

தேதி: December 24, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1 கப்
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
கறிவேப்பில்லை - 3 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டினை மிகவும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
ஊற வைத்துள்ள துவரம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து பின்னர் பொடியாக வெட்டி வைத்துள்ள பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்துள்ள துவரம் பருப்பை போடவும்.
அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு வேக விடவும்.
இடையிடையே 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டு சுமார் 20 – 25 நிமிடம் வேகவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான கிட்ஸ் துவரம் பருப்பு புட்டு ரெடி.


இதனை சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செய்து பார்த்தச்சு.கொஞ்சம் அரைத்த பருப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து பின்பு சேர்த்து செய்தேன்.ஈசியாக இருந்தது,நல்ல இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா அக்கா,
மிகவும் மகிழ்ச்சி…
இந்த குறிப்பு என்னுடைய செய்முறையில் யாரும் சமைக்கலாம் பகுதியில் வெளிவந்துள்ளது…http://www.arusuvai.com/tamil/node/11353
வேகவைத்து சமைத்தால் வேறு சுவை வரும்..இப்படி செய்தால் வேறு சுவை வரும்…உங்களுக்கு டைம் கிடைக்கும் பொழுது இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்…செய்து பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா ஆச்சல்,
இந்த முறையில் பைத்தம்பருப்பு வைத்து செய்து பார்த்தேன். (காலையிலதான் இந்த ரெஸிப்பி பார்த்தேன். துவரம் பருப்பை 4 , 5 மணி நேரம் ஊரவைத்து செய்வதற்க்கான கால அவகாசம் இன்றைக்கு இல்லை). சோ, பருப்பை மாற்றி விட்டேன். : )
ரொம்ப நன்றாக சுவையாக இருந்தது, நெய்யுடன் சுடு சாதத்தில்!. அடுத்தமுறை துவரம் பருப்பு போட்டு செய்து பார்க்கனும். நல்ல ஈஸி, டேஸ்டி ரெஸிப்பிக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி… சுஸ்ரீ.
நானும் அடுத்த முறை செய்யும் பொழுது கண்டிப்பாக பாசிப்பருப்பு வைத்து சமைத்து பார்க்கிறேன்.
பின்னுடன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்