பூசணிக்காய் வற்றல்

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

வெள்ளை பூசணி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 20
சீரகம் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பூசணிக்காயின் மேல் பட்டையை சீவி விட்டு, நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், சீரகம், கல் உப்பு ஆகியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதினை பூசணிக்காய் துண்டுகளோடு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வெள்ளை துணியை வெய்யிலில் விரித்து, அதில் பிசைந்து வைத்துள்ள பூசணிக் கலவையை ஒரே அளவான சிறு சிறுத் துண்டுகளாக கிள்ளிப் போடவும்.
வெய்யிலில் நன்கு காயவைத்து பிறகு எடுத்துப் பத்திரப்படுத்தவும்.
இந்த வற்றலை பொரித்தும் சாப்பிடலாம் அல்லது மோர் குழம்பில் போடுவதற்கும் பயன்படுத்தலாம்.


மேலும் சில குறிப்புகள்