நெல்லிக்காய் துவையல்

தேதி: December 26, 2008

பரிமாறும் அளவு: 2 - 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய நெல்லிக்காய் (துண்டுகள்) - 2 கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரை கப்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - அரை பாதி
உள்ளி - ஒரு பல்
இஞ்சி - தேவைக்கேற்ப


 

ஒரு சிறிய தாட்சியில் (வாணலியில்) எண்ணெயை சூடாக்கி கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம் (கால் பாதி )போட்டு ஒரளவு பொரிய விடவும். ஒரளவு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு நெல்லிக்காய்களை (துண்டுகள்) வதக்கி கொள்ளவும்.
வதக்கிய நெல்லிக்காய், வெங்காயம் (கால் பாகம்), பச்சைமிளகாய், உப்பு, உள்ளி, இஞ்சி போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு தாளித்தவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும்.


வைட்டமின் சி, கால்சியம் மிக நிறைந்தது. உங்கள் சருமத்தை பளபளவென்று மாற்றும் இளமையை அதிகரிக்க செய்யும் ஒரு தேவலோகத்து கனியே தான் இந்த நெல்லிக்காய் இதில் செய்யப்படும். துவையலின் சுவை எப்படியிருக்கும் என்பதை நீங்களே செய்து சாப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள். (1)இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல் உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும் (2) உள்ளி ,இஞ்சி, வெங்காயம் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்