கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ்

தேதி: December 28, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் - 1/2 கிலோ
மைதா மாவு - 1 கப் + 1/2 கப்
ப்ரெட் க்ரம்ஸ் - 1 கப்
பார்மஜான் சீஸ் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
பீன்ஸை முதல் மற்றும் நுனிப்பகுதியை வெட்டி கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் சிறிது உப்பு சேர்த்து பீன்ஸை போட்டு 2 – 3 நிமிடம் வேக விடவும்.
பின்னர் குளிர்ந்த தண்ணீரில் சில ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். இப்பொழுது 2 – 3 நிமிடம் வேக வைத்த பீன்ஸை குளிர்ந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போடவும்.
( குளிர்ந்த தண்ணீரில் போடுவதால் பீன்ஸை மேலும் வேகாமல் பார்த்து கொள்ளவும் மற்றும் பீன்ஸின் நிறம் மாறாமல் இருக்கவும் அவ்வாறு செய்கின்றோம்)
5 நிமிடம் கழித்து பீன்ஸை தண்ணீரில் இருந்து எடுத்து நன்றாக வடிக்கட்டவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை 2 கப் தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும். (நீங்கள் விரும்பினால் மைதா மாவிற்கு பதில் முட்டை உபயோகிக்கலாம்). ப்ரெட் க்ரம்ஸுடன் பார்மஜான் சீஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின் ஒரு பீன்ஸை எடுத்து மைதா மாவில்(தனியாக கொடுத்துள்ள 1/2 கப் மாவு) பிரட்டி விட்டு அதனை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் போட்டு எடுக்கவும்.
அதன் பின் ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
இப்படியே அனைத்து பீன்ஸ்யையும் செய்யவும். பிறகு எல்லாம் முடிந்ததும் அதனை ப்ரிட்ஜில் 1 - 2 மணி நேரம் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பின் பீன்ஸை எடுத்து பொரிக்கவும்
இப்பொழுது சுவையான கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ் ரெடி. இதனை சாஸுடன் அல்லது ப்ளு சீஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


இதனை குறைந்தது 2 - 3 நாள் முன்னதாகவே செய்து வைத்து பின் விருந்தினர் வரும் பொழுது பொரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்