பயிறு குழம்பு

தேதி: December 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. காராமணி - 1 கப்
2. பச்சை பயிறு - 1 கப்
3. தக்காளி - 2
4. இஞ்சி - 5 கிராம்
5. பூண்டு - 5 கிராம்
6. பச்சை மிளகாய் - 3
7. தேங்காய் - 1 கப்
8. அரைத்த பச்சரிசி - 1/2 கப்
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. மிளகாய் தூள் - 10 கிராம்
11. தனியா - 20 கிராம்
12. கடுகு, சீரகம் - தாளிக்க
13. உப்பு


 

இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் பொடியாக நறுக்கவும்.
தனியா'வை வறுத்து அரைக்கவும்.
காராமணி, பச்சை பயிறு வேக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து குழைய வதக்கவும்.
பின் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேக வைத்த பயிறு, அரைத்த தனியா, நைசாக அரைத்த பச்சரிசி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு (குழம்பு பதம்) இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா, இன்று பயிறு குழம்பு செய்தேன், தேங்காயும், அரைத்த அரிசி மாவும் சேர்க்கவில்லை இருந்தும் நன்றாகயிருந்தது. நான் எப்பொழுதும் வெந்தபயிரை ஆறவைத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்து அரைத்துவிடுவேன். குழம்பும் கெட்டியாகயிருக்கும், ருசியும் மாறாது. முதல் முறையாக இரண்டு பயிறும் சேர்த்துச் செய்தேன் ரொம்ப நல்லாயிருந்துச்சுப்பா, சூப்பர் ஐடியாக்கு ரொம்ப.........நன்றி..................

அன்புடன்:-).........
உத்தமி:-)

மிக்க நன்றி உத்தமி. :) அரிசி கெட்டியாக்க தான். தேங்காய் தான் ருசிக்கு. விடுபட்டால் ப்ரெச்சனை இல்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா