சிக்கன் ட்ரம்ஸ்டிக் ப்ரை

தேதி: December 28, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சிக்கன் கால் பகுதி - 12 - 18 பீஸ்
சில்லி பவுடர் - 1-2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 - 2 டீஸ்பூன்
கரம் மசாலா- கால் ஸ்பூன்
லைம் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் -1 டேபிள் டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ரெட் கலர் - பின்ச்
எண்ணெய் - 100 - 150 மில்லி


 

சிக்கனை கழுவி லெக் பீஸை கீறி விட்டுக்கொள்ளவும். தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய சிக்கனில் உப்பு, தயிர், லைம் ஜூஸ், இஞ்சி பூண்டு, கரம் மசாலா, சில்லிபவுடர், ரெட் கலர், கார்ன் மாவு, ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து ஊற வைக்கவும்.
நாண்ஸ்டிக் பானில் எண்ணெய் காய விட்டு ஊறிய சிக்கன் பீஸை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான சிக்கன் ட்ரம்ஸ்டிக் ப்ரை ரெடி.


இஞ்சி பூண்டு, காரம் அவரவர் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம். பிரியாணி, ப்ரைடு ரைஸ் ,புலாவ் வகைகளுடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

போட்டோ இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஷ்ஷ்..............ஆஆஆஆஆ மேடம் உங்க ரெசிப்பியெல்லாம் படிக்கும் போதே உடனே செய்து சாப்பிட தோணும். இதுல படத்தையும் இணைக்க சொல்லி மேலும் மேலும் டெம்ப்டை அதிகரிக்கிறீங்களே!!!!

indira

வ்ந்தா நிச்சயம் இதுவும் உண்டு.இந்திரா o.k வா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.