உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: December 29, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
கடுகு - தாளிக்க
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு


 

முதலில் தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக வெட்டி கொள்ளவும். தக்காளியை நீளமாக அரியவும்.பூண்டினை நசுக்கி வைக்கவும் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
பின்னர் அதில் நசுக்கி வைத்துள்ள பூண்டினை போட்டு வதக்கவும். அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
இப்பொழுது உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். குறைந்த தீயில் சுமார் 15 நிமிடம் வேகவைக்கவும்.
அடிக்கடி அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதா, இந்த குறிப்பை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. கப்ஸிகம் தாலிற்கும், தயிர் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிகவும் நன்றி வின்னி.
சூப்பர் காம்பினேஷன் போங்க…..
எனக்கு இந்த உருளைகிழங்கு வறுவலுடன் இப்படி பருப்பு , தயிர் உடன் சாப்பிட மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா நேற்று உங்களுடைய உருளைகிழங்கு வறுவல் செய்தேன் நல்ல இருந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிகவும் நன்றி மஹா.
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹலோ கீதா ஆச்சல்,
இன்று உங்க உருளைகிழங்கு வறுவல் செய்தேன். காப்ஸிகம் ரைஸுடன் சாப்பிட நல்லா அருமையா இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி ஸ்ரீ.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா உருளைகிழங்கு வறுவல் செய்தேன், கூட உங்க வெண்டைக்காய் மோர்குழம்பு, நல்லா இருந்தது நன்றி.

மிகவும் நன்றி கவி.
சூப்பர் காம்பினேஷன்…எனக்கு இப்படி சாப்பிட மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அட்மின் அவர்களுக்கு இந்த குறிப்புடன் போட்டோவினை இணைத்தற்கு மிகவும் நன்றி
அன்புடன்,
கீதா ஆச்சல்