புளி சாதம் (சாதம் மீந்துவிட்டால்)

தேதி: December 29, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதம் - 3 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை


 

நாம் எப்பொழுதும் சாதம் மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி விடுவோம். அதற்கு பதில் மீந்த சாதத்தில் புளி ஊற்ற போகிறோம்.
முதலில் புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மிகவும் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
பின் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மீதம் உள்ள சாதத்தில் சேர்த்து கிளறவும்.(தண்ணீர் அதிகம் இருக்க கூடாது.).
இதை அனைத்தும் முன் தினம் இரவே செய்து மறு நாள் காலையில் எழுந்து சாதத்தை தாளித்தால் மட்டும் போதும்.
மறுநாள் காலையில் :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து பின் புளி சாதம் கலவையை சேர்த்து கிளறவும்.
சுமார் 10 நிமிடம் புளி வாசம் போகும் வரை கிளறி சூடாக புளி சாதத்தை பரிமாறவும்.


சாதம் நிறைய மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடுவதை விட இப்படி புளி சாதம் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதா ஆச்சல்,
இந்த புளி சாதம் செய்தேன். சாதம் மீந்துவிட்டால் என் அம்மா இப்படிதான் செய்வார்கள் ... எனக்கு இந்த டைப் புளி சாதம் ரொம்ப பிடிக்கும்!. உங்க குறிப்பு பார்த்ததும் இன்று செய்தேன். நன்றாக இருந்தது. எனக்கு பழைய நினைவுகளை கொண்டுவந்த உங்களின் இந்த குறிப்புக்கு நன்றி! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிகவும் நன்றி… சுஸ்ரீ.
எங்கள் வீட்டில் அம்மாவும் இப்படி தான் செய்து கொடுப்பாங்க…மிகவும் சுவையாக இருக்கும்…
பின்னுடன் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா ஆச்சல், இன்று உங்கள் புளிச்சாதம் செய்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி. அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி இமா.
செய்து பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

இன்னைக்கு உங்க புளிசாதம்தான் செய்தேன் நல்லா இருந்தது கீதா,நேற்று எதிர்பாராத விதமாக ஓசி சாப்பாடு வந்துவிட்டது,நான் செய்து வைத்திருந்த, மீதியான சாதத்தை உங்க முறை புளிசாதம் செய்துட்டேன். நன்றி.

மிகவும் நன்றி கவி. நீங்கள் அர்குட்டில் ஸ்கிரப் செய்த்தற்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்