மரவள்ளிக்கிழங்கு கருவாட்டுக் கறி

தேதி: December 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம்
கருவாடு - 100 கிராம்
கறித்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பால் - 1/2 டம்ளர்
எலுமிச்சம் பழம் - பாதி
தாளிக்க:
சின்ன வெங்காயம் - 30 கிராம்
செத்தல் மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கிழங்கையும் கருவாட்டையும் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பாத்திரத்தை மூடி வைக்கவும். நன்கு முழுவதுமாக மூட வேண்டாம். மரவள்ளிக்கிழங்கில் ஒரு வித நச்சுத் தன்மை இருக்கும், வேக வைக்கும் போது வெளியேறும் ஆவியின் வழியாக அத்தன்மை போய் விடும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு மற்றும் கருவாடு வெந்ததும் மூடியை திறந்து நன்கு மசித்து விடவும்.
அதன் பிறகு பால் மற்றும் கறித்தூள் சேர்த்து கிளறி விட்டு உப்பின் அளவை சரிப்பார்த்து விட்டு சேர்த்துக் கொள்ளவும். உப்பின் சுவை அதிகமாக உள்ள கருவாடாக இருப்பின் உப்பு சேர்க்க தேவையில்லை.
கலவையை நன்றாக ஒரு முறை கிளறி விட்டு கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து கலவையுடன் கொட்டி கிளறி விடவும்.
மேலே எலுமிச்சம் பழம் பிழிந்து சிறிய பெளலில் எடுத்து வைத்து பரிமாறவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு கருவாட்டு கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா,புது காம்பினேசனாக இருக்கே,உங்களிடம் இருந்து இலங்கை சமையல் கற்றுக்கொள்ளலாம் தானே!இலங்கைத்தமிழும் தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இது ரொம்ப அருமையாக இருக்கும் .கேரளாவின் மத்தி மீனும் மரவள்ளியிம் கலந்து இது போல சமைப்போம் செம்ம அருமையாக இருக்கும்...பார்க்கவே ஆசை வந்துவிட்டது.

ஆமா ரூபி எனக்கும் இந்த குறிப்பை பார்த்ததும் ஞாபகம் வந்திடுச்சு.கிழங்கும் மத்தி மீனும் நேற்றுதான் வாங்கி வந்திருந்தேன்.இன்னிக்கு நான் மரவள்ளிகிழங்கும் மத்தி மீனும் சேர்த்து கப்பையும் மீனும் செய்தேன். யாருக்காவது வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க.பார்சல் சர்வீஸ் கிடையாது :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆசியா, மிக்க நன்றி, உண்மையில் இந்தக் கறி சுவையானதுதான். இதே முறையில் கருவாடு போடாமலும் செய்துகொள்ளலாம்.

அப்படியா தளிகா, உங்களூரிலும் fபேமசோ?

கவிசிவா, நல்ல கூர்மையான புத்திதான் உங்களுக்கு, பார்சல் சேவிஸ் கிடையாதென்று முன்கூட்டியே அறிவித்துப் போட்டீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா புது விதமா இருக்கு மரவள்ளி கிழங்கில் செய்வது.
மரவள்ளி கிழங்கி இனிப்பு உருண்டை, மரவல்ளி கிழங்கு அவித்தது, மரவள்ளிகிழங்கு அடை, சாலட் களில் உருளைக்கு பதில் சேர்ப்பார்கள்.
மரவள்ளி கிழங்கு ரொம்ப கேஸ் என்பார்களே அடிக்கடி செய்வீர்களா?
சூப்பர் குறிப்பு.

ஜலீலா

Jaleelakamal

ஓ... ஜலீலாக்கா
பார்த்ததுமே சூப்பர் என்று சொல்லிட்டீங்கள் அதற்கு நன்றி. எனக்கு மரக்கறிகளில் அதிகம் பிடித்ததில் மரவள்ளிக்கிழங்கும் ஒன்று. ஆனால் பக்கத்தில் வாங்க முடியாது, கொஞ்சம் தூரம் போய்த்தான் வாங்க வேணும். உடம்புக்கு அடிக்கடி சாப்பிடுவது நல்லதில்லைத்தான். ஆனால் சுவை பிடித்திருக்கிறதே. இன்னுமொன்று மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அன்று உணவில் இஞ்சி சேர்க்கக்கூடாதென்று சொல்வார்கள். இரண்டும் சேர்கிறபோது ஒருவித நஞ்சுத்தன்மையை உருவாக்குகிறதாம். ஆனால் ஒருசிலர் சொன்னார்கள், அவித்த கிழங்கை இஞ்சிச் சம்பலோடுதான் சாப்பிடுவோம் என்று. எதை நம்புவது. இதில் பகோடாவும் செய்வார்கள்.

எனக்கு நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் பின்னூட்டங்களும் அனுப்பிமுடியவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மரவள்ளி கிழங்கு ஏன் நல்லதில்லை?உடம்புக்கு நல்லது என்று தானே கேள்விபட்டிருக்கிறோம்.கேரளாவில் ஒரு சில வீடுகளில் ஒரு நேர உணவாகவே மீன் குழம்போ அல்லது தேங்காய்ப்பால் இனிப்போ கலந்து சாப்பிடுவோம்..அப்படி பெரிதாக கேஸ் ப்ராப்லம் வந்ததாகவும் எனக்கு நியாபகம் இல்லையே..புது செய்தியாக இருப்பதால் கேட்கிறேன் தமிழ்நாட்டில் அது கேடு என்று சொல்வார்களா

கப்ப கிழங்கு கேஸா இல்லையா?

தளிகா கிழங்கு அயிட்டமே கேஸ் என்பார்கள், ஆனால் சேம கிழங்கு, சீனி வள்ளி, மரவள்ளி இதேல்லாம் அடிக்கடி சாப்பிட்டால் ரொம்ப கேஸ். எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அம்ம இப்ப ஊருக்கு போய் இருந்த போது கூட வர அன்று மரவள்ளி கிழங்கு உருண்டை செய்து கொடுத்தார்கள் ஏற்பேட்டில் ரொம்ப நேரம் வயிட் பண்ணி கொண்டு இருந்தேன் அதான் சாப்பிட்டென். ஒரு வேளை குழம்பி பூண்டெல்லாம் போட்டு சமைப்பதல் அது காம்பண்சேட் ஆகிடுமா என்னவென்று தெரியல.
ஜலீலா

Jaleelakamal