மிஸ்ஸி ரொட்டி

தேதி: December 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோதுமை மாவு - 200 கிராம்
2. கடலை மாவு - 50 கிராம்
3. வெங்காயம் - 1
4. பச்சை மிளகாய் - 2
5. உப்பு
6. பட்டர் - 2 மேஜைக்கரண்டி


 

வெங்காயம், பச்சை மிளகாய் மிக பொடியாக நறுக்கவும். மாவு இரண்டையும் கலந்து வைக்கவும்.
இதில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும் (சீரகமும் சேர்க்கலாம்.).
இதை வழக்கமாக திரட்டும் சப்பாத்தியை விட சற்று கனமாக தேய்த்து பட்டர் தடவி சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
இன்று காலை இந்த மிஸ்ஸி ரொட்டி செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. பெயர்க்காரணம் ஏதும் இருக்கா இதற்கு? "மிஸ்ஸியம்மா" படம்தான் கேள்விப்பட்டிருக்கென். மிஸ்ஸி ரொட்டி கேள்விப்படுவது இதுவே முதல்முறை!
குறிப்பிற்கு நன்றி வனிதா!

எனக்கு பேருக்கு காரணம் தெரியாது கீதா. ஹிஹிஹீ. எதுவா இருந்தாலும் ருசியா இருந்தா கேள்வி கேக்காம சாப்பிடுவேன்.;) மிக்க நன்றி கீதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா!
அப்ப என்னையும் கேள்வியெல்லாம் கேட்காம சாப்பிடச்சொல்றீங்க அப்படித்தானெ? ஓக்கே,ஓக்கே!
பேரு எதுவா இருந்தா என்ன ருசியா இருந்தா சரி!(:-)

அச்சசோ... :( அப்படிலாம் சொல்லல கீதா.... தப்பா நினைக்காதிங்க. நான் சும்ம என்னை பற்றி கேலியா சொன்னேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, இன்று மாலை டிபனிற்கு இந்த ரொட்டி செய்தேன். மிகவும் நன்றாகயிருந்தது.

அன்புடன்:-)...........
உத்தமி:-)

மிக்க நன்றி உத்தமி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா