செட்டிநாடு தக்காளி குழம்பு

தேதி: December 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (9 votes)

 

1. தக்காளி - 5
2. பச்சை மிளகாய் - 4
3. வெங்காயம் - 2
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
6. வெல்லம் - 1 தேக்கரண்டி
7. புளி கரைசல் - 1 கப்
8. கறிவெப்பிலை

அரைக்க: (1)

1. மிளகாய் வற்றல் - 5
2. இஞ்சி - 1/4 இன்ச்
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி

அரைக்க: (2)

1. தேங்காய் துருவல் - 1/4 கப்
2. கசகசா - 2 தேக்கரண்டி


 

வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.
தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.
பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.
அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.
புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.
இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.


இதில் புளி கரைசலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கு சேர்த்தும் சமைக்கலாம். குளிருக்கு இதமாக காரசாரமாக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

This recipe inspires us to cook.We like to make this kulambu.

Can u give gram measurement of onion,tomato.

We have readymade ginger paste.How many teaspoon we can take for this.

While grinding(2),grated coconut 1/4 cup means how many tablespoon of grated coconut.

sorry for asking basic doubts to a experienced person like u.If we don't clear it properly,we are cooking somehow and wasting the food.We have done it many times like this.

Thanks.

அருண்ராஜ்... 5 தக்காளின்னா மீடியம் சைஸ் தக்காளி 5. 500 கிராம் கிட்ட நிக்கும். அதே மீடியம் சைஸ் வெங்காயம் கணக்கு வைங்க. 1/4 கப் துருவல் 4 வரும். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், எப்பவும் கப் அளவு சொல்லி இருந்தா டீ கப் அளவு வெச்சுக்கங்க. வெங்காய், தக்காளி எண்ணிக்கை எப்பவுமே மீடியம் சைஸ் தான்.... இல்லை என்றால் சின்ன சைஸ் என்று குறிப்பில் சொல்லி இருப்பாங்க. இதை நினைவில் வைங்க, எப்பவுமே சமையல் சொதப்பாது. :) செய்து பார்த்து சொல்லுங்க. சந்தேகம் இருந்தா கேட்டு செய்வதே மகிழ்ச்சி... தப்பா செய்துட்டு நல்லா வரலன்னா குறிப்பு தந்தவங்க வருத்தப்படுவாங்க. அதனால் சாரி வேண்டாம்... எப்ப சந்தேகம் இருந்தாலும் கேட்டுட்டே செய்யுங்க. எல்லா தோழிகளும் அதையே விரும்புவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க தக்காளி குழம்பு ரொம்ப நல்லாயிருந்தது. நான் புளி சேர்க்கவில்லை. நீங்கள் சொல்வது போல் கடைசியில் தேங்காய்பால் சேர்த்தேன். மிக்க சுவை

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

super karuthu kandinew ok ok ok thak you

மிக்க நன்றி தனிஷா... நல்லா வந்துதுன்னு சொன்னதும் தான் நிம்மதியா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று உங்கள் ஸ்டைல் தக்காளி குழம்பு செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது we had a wonderful dinner.thanks

மிக்க நன்றி சுகி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I have made this kolambu with yr receipe.
It was nice.thanks for the receipe

Regards
Sathya

மிக்க நன்றி சத்யா.. செய்து பார்த்து பின்னூட்டம் தந்தது சந்தோஷமா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா