காஷ்மீரி லாம்ப் க்ரேவி

வழங்கியவர் : asiya omar
தேதி : திங்கள், 29/12/2008 - 21:28
ஆயத்த நேரம் : 15 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடம்
பரிமாறும் அளவு : 6 நபகளுக்கு
- மட்டன் - அரைக் கிலோ
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
- பே லீஃப் - 1
- கிராம்பு -2
- பட்டை - சிறிய துண்டு
- கரம் மசாலா - அரைஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
- பாதாம் பருப்பு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 100 மில்லி
- க்ரீன் ஆப்பிள் - 1-2(விருப்பப்பட்டால்)
- கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
- ஆனியன், மல்லி இலை கட் பண்ணிக்கொள்ளவும். க்ரீன் ஆப்பிள் நீக்கி பொடியாக சாப் பண்ணிக்கொள்ளவும். மட்டனை கழுவி தண்ணீர் வடிகட்டவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஆனியனை ஃப்ரை பண்ணவும். பே லீஃப், கிராம்பு, பட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஆனியன் சாஃப்டாக வேண்டும், ப்ரவுன் ஆகக் கூடாது.
- மட்டன் பீஸ் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து,இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சில்லி பவுடர், பாதாம் பருப்பு பவுடர் சேர்த்து கிளறவும்.
- பின்பு தயிர் சேர்த்து பிரட்டி விடவும். ஆப்பிளை சேர்க்கவும். மல்லி இலை சேர்க்கவும். குக்கரை மூடி மூன்று விசில் வைத்து இறக்கவும்.
- மட்டன் வெந்து விட்டதா என்று செக் செய்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
- சுவையான காஷ்மீரி லேம்ப் கிரேவி ரெடி.
Note:
காஷ்மீரி சிக்கனும் செய்யலாம், சிக்கனை குக்கரில் வைக்காமல் 15 நிமிடம் வெந்து எடுக்கலாம். தேங்காய் சேர்த்தும் செய்யலாம்,காஷ்மீரி ரெசிபியில் பெரும்பாலும் தேங்காய் சேர்க்க மாட்டார்கள். ட்ரை பண்ணிப்பாருங்க.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
இவ்வளவு சீக்கிரம் இந்த குறிப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி :) எனக்கு சில கேள்விகள்.
1) பாதாம் பருப்பு தூள் என்றால் almond meal என்று சொல்வோமே அதுவா?
2) ஹோடெலில் சாப்பிட்ட கிரேவியில் sultanas இருந்தது. அதை சேர்க்கலாமா?
3) ஆப்பிள் விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ள கூறி இருக்கிறீர்கள். அதை சேர்க்க விட்டால் சுவை மாறுமா?
4) இதன் மேலே நட்ஸ் (பாதாம், முந்திரி) வறுத்து தூவலமா?
அடுத்த வாரத்தில் இதை முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். முடிந்த பொது பதில் கொடுங்கள் :)
அன்புடன்
உமா
ஆமாம்.பாதாம் பருப்பு ஊற வைத்தோ அல்லது வறுத்தோ பவுடர் பண்ணி கூட போடலாம்.எனக்கு கூட இப்ப தான் நினைவு வருகிறது.பாதாம் ப்லேக்ஸ் சுல்தானாஸ் கூட வறுத்து மேலே தூவி விடலாம்,பரிமாறுவதற்கு முன்பு. ஒரு ஆப்பிள் சேர்த்தே செய்து பாருங்கள்.சாப்பிட்டு தான் இருக்கேன்.இனிதான் ட்ரை பண்ணனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நீங்க மட்டும் தான் என்னை good girl னு சொல்றீங்க ;) இவ்வளவு சீக்கிரம் பதில் கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க! நெக்ஸ்ட் வீக் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன். நல்லாதான் வரும் :)
அன்புடன்
உமா