க்ரீமி பாஸ்தா

image

வழங்கியவர் : geethaachal

தேதி : செவ்வாய், 30/12/2008 - 10:13

ஆயத்த நேரம் : 2 நிமிடம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 3

0
No votes yet
Your rating: None
 

 

  • பாஸ்தா - 1 கப் ( எதாவது ஒரு வகை)
  • பால் - 1 கப் + 2 தேக்கரண்டி
  • பட்டர் - 1 தேக்கரண்டி
  • மைதா மாவு - 1 தேக்கரண்டி
  • உப்பு - 2 தேக்கரண்டி
  • பார்மாஜன் சீஸ் - 1 தேக்கரண்டி

 

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது பாஸ்தாவை உப்புடன் சேர்த்து 8 - 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • பாஸ்தா வேகும் வரை ஒரு கடாயில் பாலினை ஊற்றி நன்றாக காய்ச்சவும்.
  • பின் மைதா மாவினை சிறிது பால் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது மைதா மாவு கரைசலை, பட்டருடன் சேர்த்து பாலில் ஊற்றி 5 நிமிடம் மைதா வாசம் போகும் வரை வேகவிடவும்.
  • பாஸ்தா வெந்த பிறகு அதனை வடிகட்டவும்.
  • பின்னர் பாஸ்தாவை பாலில் ஊற்றி கிளறி விடவும்.
  • இப்பொழுது மிகவும் எளிதில் செய்ய கூடிய கிரீமி பாஸ்தா ரெடி. இதனை பரிமாறும் பொழுது பார்மஜான் சீஸை பாஸ்தா மேல் தூவும்.