பாதாம் பிஸ்கட்

தேதி: December 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டர் - 150 கிராம்
ப்ரவுண் சீனி - 125 கிராம்
முட்டை - ஒன்று
மைதா - 300 கிராம்
கறுவாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு தூள் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
துருவிய எலுமிச்சை தோல் - ஒரு தேக்கரண்டி
பாதாம்தூள் - 60 கிராம்
பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி
சீவியபாதாம் - 50 கிராம்
பாலித்தின் பை
பிஸ்கட் அச்சு


 

மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்து வைத்துக் கொள்ளவும். பாதாமை பாக்கு சீவல் போல் சீவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டர், சீனி, முட்டை சேர்த்து க்ரீம் ஆகும் வரை 10 நிமிடங்கள் அடிக்கவும்.
இந்த கலவையில் கறுவாத்தூள், கிராம்பு தூள், ஏலக்காய் தூள், எலுமிச்சைத் தோல், பாதாம் தூள் சேர்த்து ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் அதனுடன் சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சேர்த்து கலக்கவும்.
அதன் பின்னர் இந்த கலவையை உருண்டையாக உருட்டி பாலித்தின் பையால் மூடி ஒரு மணிநேரம் வைத்திருக்கவும்.
ஒரு பலகையில் மைதாமாவைத் தூவி அதில் மூடி வைத்திருந்த மாவை வைத்து பூரிக்கட்டையால் தேய்க்கவும். 4 மில்லி மீட்டர் தடிமனாக இருத்தல் வேண்டும். தேய்த்த பின்னர் விரும்பிய வடிவில் பிஸ்கட் அச்சை வைத்து வெட்டி எடுக்கவும். மீதமான மாவை மீண்டும் உருட்டி கட்டையால் தேய்த்து கேக் அச்சால் வெட்டவும். இதைப் போல் முழுவதையும் செய்துக் கொள்ளவும்.
கேக் ட்ரேயில் பேக் பேப்பரை விரித்து நறுக்கிய துண்டுகளை எடுத்து வைக்கவும். அதன் மேல் சீவிய பாதாமை தூவி விடவும். இந்த பிஸ்கட்களை அப்படியே 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
2 மணி நேரத்திற்கு பின் அவனை 175F ல் சூடாக்கி கேக் ட்ரையை உள்ளே வைத்து 10 - 12 நிமிடங்கள் பேக் செய்யவும். பிஸ்கட்கள் பேக் ஆனதும் வெளியில் எடுத்து ஆறியதும் பரிமாறவும். சுவையான பாதாம் பிஸ்கட் தயார்
அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான பாதாம் பிஸ்கட்டை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு க்ரிஸ்பியா.நான் இன்னும் பிஸ்கட் செய்ததில்லை,ப்ரவுன் சுகர் இல்லை வாங்கிட்டு செய்து பார்க்கணும்.இன்னும் நிறைய வகைகள் கொடுங்க,நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வத்சலா இந்த 1 முட்டையை போடாமல் விட்டால் சரியா வருமா?பிரவுன் சுகரும் இருக்கு சொன்னீங்களெண்டா நாளைக்கு செய்வன்.

சுரேஜினி

ரொம்ப நல்லா இருக்கு உங்க குறிப்பு.எனக்கும் கேக் மற்றும் பிஸ்கட் வெகுதூரம்.யாராவது செய்துக் கொடுத்தால் சாப்பிடுவேன்.அதனால் நீங்க எப்ப பிஸ்கட் கேக் செய்தாலும் எனக்கும் சேர்த்து செய்துக் கொடுங்க.

முட்டை போடாம செய்தாலும் நல்லா தான் இருக்கும் :)) இல்லைன்னா ஒரு கப் ஆப்பிள் ஸாஸ் சேர்த்துங்க . நான் செய்திருக்கேன் இப்படி இந்த ரெஸிபி இல்லை வேற ஒரு பிஸ்கட் ரெஸிபி

"லட்சியங்களை துரத்தியதால் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுரேஜினி முட்டை போடாம செய்தால் கொஞ்சம் காட்டாக இருக்கும் என நினைக்கிறேன்.இலா சொன்ன மாதிரி செய்து பாருங்கள். செய்து பார்த்து எப்படி வந்தது என்று சொல்லுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இலா அப்பிள் சோஸ் சேர்த்து செய்தேன்.நன்றாகத்தான்
வந்தது.பயத்தில் கொஞ்சம்தான் செய்தனான்.திருப்பி செய்ய வேண்டும்.நன்றி வத்சலா் நல்ல ஈசியான டேஸ்ட்டி குறிப்பு.ஆராவது பீனட்பட்டர் பிஸ்கட் செய்யத்தெரிஞ்சா சொல்லித்தாங்கோ.

சுரேஜினி

இப்ப காலர் இல்லாத சட்டை போட்டு இருக்கேன் ஆனாலும் தூக்கி விட்டுகிறேன் காலரை!!!பீனட் பட்டர் பிடிக்குமா உங்களுக்கு எனக்கும் ஆனா இப்ப சாப்பிடறதில்லை ((

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுரேஜினி இக் குறிப்பு செய்து பின்னூடம் அனுப்பியதற்கு நன்றி. அடுத்தமுறை செய்யும் போது
அப்பிள் சோஸ் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஆகா வற்சலா மேடம் சத்தான பாதம் பிஸ்கேட் நல்ல குறிப்பு.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா நலமா? மன்னிக்கவும் இன்று தான் இப் பகுதியைப் பார்த்தேன். உங்கள் பாராட்டிற்கு நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அது என்ன கறுவதூள்?
brown sugar என்றால் பனைகற்கண்டா ?
radika

கறுவாத்தூள் என்றால் கறுவாபட்டையை அரைத்தபவுடர்.ஆங்கிப்பெயர் karuvathool-cinnamon powder. brown sugar என்றால் கரும்புச்சீனி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"