நண்டு கிரேவி

image

வழங்கியவர் : asiya omar

தேதி : செவ்வாய், 30/12/2008 - 23:54

ஆயத்த நேரம் : 20 நிமிடம்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடம்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

4.57143
7 votes
Your rating: None
 

 

  • நண்டு - 1 கிலோ
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - அரை ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • வெங்காயம் - 2(பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • மிளகாய் - 4
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  • மல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்
  • தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு - 4
  • உப்பு - தேவைக்கு.

 

  • நண்டை உடைத்து சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் அலசி வைக்கவும். பின்பு 1 டம்ளர் தண்ணீர் மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். நண்டு 5-10 நிமிடத்தில் வெந்து தண்ணீர் வற்றியவுடன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் பண்ணி வைக்கவும். தேங்காய், முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் காய விடவும். சீரகம், கறிவேப்பிலை போடவும். பொரிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும், தக்காளி, மிளகாய், உப்பு போடவும், மசிந்தவுடன் அனைத்து மசாலாவையும் போட்டு பிரட்டவும்.
  • அடுத்து வேகவைத்த நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 5 -10 நிமிடம் கழித்து நண்டு மசாலாவில் கோட் ஆகி இருக்கும். தேங்காய் அரைத்தை விடவும் கெட்டியாக இருந்தால் அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். சிம்மில் வைக்கவும்.
  • கொதித்து மசாலா, தேங்காய் வாடை அடங்கியவுடன் எண்ணெய் தெளிந்து இறக்கவும். மல்லி இலை தூவவும். சுவையான நண்டு கிரேவி ரெடி

Note:

காரம் விரும்புபவர்கள் அதிகம் சில்லி பவுடர் அல்லது மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.சாப்பிடும் போது கவனமாக சாப்பிடவும். இரண்டு கையையும் உபயோகித்து சாப்பிட்டால் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். குழந்தைகளுக்கு சதைப்பற்றை எடுத்து கொடுக்கவும். சளித்தொந்திரவிற்கு நல்லது. நண்டு சாப்பிடும் போது main dish கூட தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம். சப்பாத்தி, ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறவும்.







மிக்க நன்றி.பார்க்க மிகவும் நல்ல இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.