"மனோகரி சமையல்" அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 4 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

சென்றமுறை அதிகம் சமைத்து அசத்த போவது யாரு??? என்று தலைப்பின் கீழ் நாம் சமைத்த குறிப்புகள் வகைபடுத்த பட்டு அதிக குறிப்புகள் செய்தவரை வெற்றியாளராக அறிவித்து மகிழ்ந்தோம்..

இப்பொழுது "மனோகரி சமையல்" அசத்த போவது யாரு??? இத் தலைப்பில் நாம் செய்த குறிப்புகளை வெளியிட்டு உள்ளேன்.

அனைவரும் இதனை சரிபார்த்து ஏதேனும் தவறு இருந்தால் அன்போடு சுட்டி காட்டும் படி வேண்டுகோள் வைத்து அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறேன்...

பட்டம் பெற்ற எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அப்படியே... அழகான இந்த வெள்ளை ரோஜா. பிடிசிருக்கா??!! ;) கலக்குங்க. ரேணுகா... உடம்பை பாத்துக்கங்க. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணுகா,
பட்டமளிப்பு விழா முடிந்ததா? மிக்க நன்றி ரேணுகா... பொறுமையோடு கணக்கெடுத்துப் போட்டமைக்கு, இம்முறை நீங்களும் அசத்தல் இளவரசி ஆகிவிட்டீங்கள்.

அசத்தல் ராணி "துஷியந்தி" க்கும் மற்றும் 2வதாக அசத்தியுள்ள "அரசி" க்கும் 3வது இடத்தை பிடித்துள்ள "ரேணுகா" விற்கும் "சுரேஜினி" க்கும்..... மற்றும் இதில் எம்மோடு பங்குகொண்டு அசத்திய அனைத்து அன்புத் தோழிகளுக்கும்... எம்மோடு ஒத்துழைத்து உடனுக்குடன் பதில்களை வளங்கிய மனோகரி அக்காவிற்கும் எனது நன்றிகள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஒவ்வொரு ரெசிப்பி பார்க்கும் போதும் உங்கள் இருவரையும் நினைக்குபடி நல்ல விஷயம் செய்து அறுசுவையில் அழியா இடம் பெற்று விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.வெற்றி பெற்ற அசத்தல் ராணிகளுக்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அசத்தல் ராணி துஷ்யந்தி,அசத்தல் இளவரசி அரசி,ரேணுகா,சுரேஜினி வாழ்த்துக்கள் !!!

பட்டமளிப்பு விழா இனிதே நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்து அசத்தல் ராணி பட்டம் பெற்ற திருமதி துஷ்யந்திக்கும், மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தல் இளவரசி பட்டம் பெற்ற திருமதிகள் அரசி, ரேணுகா, சுரேஜினி உங்கள் அனைவருக்கும் இந்த பன்னீர் ரோசாப்பூ மலர் மாலைகளையை அணிவித்து மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த முயற்சியைத் தொடங்கி அதில் வெற்றி நடைப்போடும் அன்பு சகோதரிகள் அதிரா மற்றும் ரேணுகாவை இந்த பட்டு சால்வையால் கொளரவித்து என் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றேன்.

கடந்த வாரம் முழுவதும் கொண்டாட்ட விடுமுறையாக இருந்தாலும் தவறாமல் அறுசுவைக்கு வந்து இந்த நிகழ்விலும் பங்கெடுத்து,என் குறிப்புகளை சமைத்து பார்த்ததோடு மட்டுமல்லாமல் பின்னூட்டங்களையும் அனுப்பியுள்ள அன்பு சகோதர சகோதரிகளான துஷ்யந்தி, அரசி, ரேணுகா, சுரேஜினி, அதிரா, வனிதா, நர்மதா, ஸ்ரீ, இந்திரா, வானதி,சுதா, ஆசியா, மாலினி, இலா, கவிசிவா, விஜி, வத்சலா, ஷராபூபதி, ஹாஷினி, மேனகா, ஆயிஸ்ரீ, கீதா ஆச்சல், அருண்பாலா, மனோ அக்கா, கவின், ஜூலைஹா, தனு, சுஜாத்தா, செல்வி, சீத்தாலட்சுமி, பர்வின்பானு, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டின் வாழ்த்து மலர் தூவி என் நன்றிகளை சமர்பிக்கின்றேன். இதில் கலந்துக் கொண்டவர்களும் கலந்துக் கொள்ளாதவர்களும் இனிவரும் வாரங்களிலும் தொடர்ந்து கலந்துக் கொண்டு ஆதரவளிக்குமாறு வேண்டி விடைப்பெறுகின்றேன் நன்றி வணக்கம்

அசத்தல் ராணி துஷியந்திக்கும் அசத்தல் இளவரசிகள் அரசி, ரேணுகா, சுரேஜினிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அசத்திய அருசுவை ராணிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மனோகரி மேடம் நீங்க எல்லாருக்கும் பதில் சொல்லி உதவியதற்க்கு நன்றி. நம்ம சியர் லீடர் அதிரா மற்றும் அக்கவுன்டென்ட் ரேனுவுக்கும் நன்றி.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அசத்தல் ராணி துஷியந்திக்கும் அசத்தல் இளவரசிகள் அரசி, ரேணுகா, சுரேஜினிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அதிரா, ரேணு,
உங்கள் இருவரின் இந்த உற்சாகமளிக்கும் பணிக்கும், சுவைமிகு குறிப்புகளை கொடுத்த மனோகரி மேடம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நாங்கள் செய்து நாங்களே சாப்பிடுறதுக்கு பட்டங்கள் தரும் ரேணு அதிராவுக்கு நன்றி.எல்லாப்புகழும் மனோகரி அக்காவுக்கே.என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.நல்லா சாப்பிட்டுட்டு இன்னும் பலதுக்கு பின்னூட்டம் கொடுக்கவில்லை கோவிக்க வேண்டாம் நாளைக்கு குடுக்கிறேன்.மனோகரி அக்கா 4 ரோஸ் வேண்டி வாடினாப்பிறகும் தூக்கி எறிய மனமில்லாமல் கவலைப்படும் எனக்கு ரோஜா மாலையா? மிக்க நன்றி.

சுரேஜினி

என்ன கொடுமைடா சாமி இது
நாங்க இல்ல சொல்லனும் பராக்!!! சரி சரி நானே சொல்லிடறேன்... இளவரசி சுரேஜினி பராக்!!! ஹேப்பி நியூ இயர் 2009!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்