கத்திரிக்காய் சட்னி

தேதி: December 31, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
கறிவேப்பில்லை - 5 இலை
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியதாக வெட்டி கொள்ளவும்.
கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்தவுடன் சிறிது நேரம் ஆறவிட்டு அதன்பின் மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் பெருங்காயம் தூள் தூவுவவும். இப்பொழுது சுவையான கத்திரிக்காய் சட்னி ரெடி.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்