பாசிப்பருப்பு பொரித்த முட்டை.

தேதி: December 31, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம்
தக்காளி - 1 (சின்னது)
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் - 1
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
முட்டை - 2
மிளகுத்தூள்- கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
நெய் - 2 டீஸ்பூன்


 

பாசிப்பருப்பை சிறிய தீயில் (3 நிமிடம்)சிவக்கக் கூடாது. லேசாக வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி இலை பொடியாக கட் பண்ணி வைக்கவும்.
குக்கரில் பருப்பு, தண்ணீர், மஞ்சள்தூள், சீரகத்தூள், சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பாதி வெங்காயம், மிளகாய், அரை ஸ்பூன் நெய் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும். பருப்பில் ஒரு டம்ளர் வெண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
ஒரு முட்டையுடன், வெங்காயம், மிளகுத்தூள், உப்பு, மல்லி இலை சிறிது கலந்து தோசை சட்டியில் நெய் விட்டு பொரித்து எடுக்கவும். சிறிய துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்.
ஒரு முட்டையை பீட் பண்ணி ஒரு பவுளில் வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கறிவேப்பிலை, கட் பண்ணிய பாதி வெங்காயம் தாளித்து குக்கரில் வேக வைத்த பருப்பை கொட்டவும்.
அந்த பருப்பில் பொரித்த துண்டு போட்ட முட்டையை சேர்க்கவும். பவுளில் உள்ள பீட் செய்த முட்டையை கொடி போல் ஊற்றவும். மூடி 5 நிமிடம் கழித்து சிம்மில் வைத்து திறக்கவும்.
சுவையும், மணமும் உள்ள பாசிப்பருப்பு,பொரித்த முட்டை ரெடி.


இது குழந்தைகள், வயதானவர்களுக்கும், குழந்தைபெற்றவர்களுக்கும் ஏற்ற உணவாகும். இதை ருசி பார்த்தால் உங்கள் மெனுவில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா, அஸ்ஸலாமு அலைக்கும். பாசிப்பருப்பு பொறித்த முட்டை இன்று செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. முட்டையும் குறைவாக செலவானது. இனிமேல் இன்ஷா அல்லாஹ் உங்கள் குறிப்பை மாதிரி தான் செய்வேன். JAZAK ALLAH KHAIR. AYSHA.

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) .நன்றி ,உங்க பின்னூட்டத்திற்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியா அக்கா,
இந்த recipie செய்து பார்க்க ஆசையாக உள்ளது, இது சாதத்துக்கு நல்லா இருக்குமா, இல்ல சப்பாத்திக்கா?

சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்,நான் சாதத்திற்கு தான் பண்ணுவேன்,ரசம்,ஏதாவது ஃப்ரை சைடுக்கு வைத்துக்கொள்ளலாம்.அதில் உள்ள பொறித்த முட்டை சாப்பிட மைல்டா நல்ல இருக்கும்,ரொம்ப ஹெவியா சாப்பிட்ட மறுநாள் சிம்பிளா இதை பண்ணி சாப்பிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

படம் இணைத்தமைக்கு நன்றி.அனுப்பி நாட்கள் பல ஆனாலும் வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா, இன்று காலையில் காய்கறி ஒன்றும் இல்லை. என்ன செய்யலாமென்று யோசித்தேன். உங்க பாசி பருப்பு பொரித்த முட்டை ஞாபகம் வந்தது. உடனே செய்துட்டேன் அக்கா. இது எங்க வீட்டு ஃபேவரைட் சைட் டிஷ் ஆக மாறிவிட்டது. ஜஸாக்கல்லாஹ் ஹைர். அஸ்ஸலாமு அலைக்கும்

முட்டை அதிகம் பொரித்து போட்டால் இன்னும் நல்ல இருக்கும்.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா அக்கா,
குறிப்புக்கு மிகவும் நன்றி. மிகவும் சுவையாக இருந்த்து. முட்டை இல்லாத்தால் வெரும் பாசிபருப்பு மட்டும் தான்…அடுத்த முறை செய்யும் பொழுது முட்டை சேர்த்து செய்கிறேன்..
இதில் முக்கியமான அயிட்டமே முட்டை தான் என்று தெரியும்..(ஆனால் பிரிஜில் வெறும் முட்டை பாக்ஸ் மட்டும் தான் இருந்த்து..முட்டை இல்லை…)
அன்புடன்,
கீதா ஆச்சல்

வாரம் ஒரு முறை இது எங்கள் வீட்டு மெனுவில் உண்டு.நான் துவரம் பருப்பை விட பாசிப்பருப்பு தான் அதிகம் உபயோகிப்பேன்,உங்கள் எல்லோருடனும் பேச சந்தர்ப்பம் அளித்த அதிரா,ரேணு விற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நான் செய்யும் பாசிப்பருப்பு குழம்பில் முட்டை! ரொம்ப நல்லா இருந்தது. அவருக்கும் மிகவும் பிடித்தது. நேற்று மைதிலியின் சீரக பட்டாணி ரைசுக்கு நன்றாக பொருந்தியது. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மிக்க நன்றி செல்விக்கா,மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் நானும் கீதாவைப் போலவே முட்டை சேர்க்காமல் 2-வது step வரை தான் செய்தேன்.முட்டை சேர்த்து அடுத்த steps செய்வதற்கு சோம்பேறித்தனம்:-((

முன்பும் பல முறை பாசிப்பருப்பு சாம்பார் செய்துள்ளேன்.ஆனால் உங்களுடையது நல்ல சுவையாக வந்தது.நன்றி.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மிக்க மகிழ்ச்சி.அடுத்தமுறை ஒரு முட்டை வெங்காயம் போட்டு பொரித்து கட் செய்து போட்டு பாருங்க.டேஸ்ட் நல்ல இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.