கொலூஷா

தேதி: April 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரித்து எடுக்க சிறிது


 

மைதா மாவில் சர்க்கரை, நெய், தயிர், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடவும்.
பிறகு, மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரிப் போல் இட்டுக் கொள்ளவும்.
மூன்று பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து அமுக்கி ஓரங்களை நன்கு அழுத்திவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையில் 200 மி.லி தண்ணீர் விட்டு பாகு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பொரித்து எடுத்தவற்றை பாகில் போட்டு மூன்று, நான்கு நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் எடுத்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்