கேசரி கேக்

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

ரவை - ஒரு டம்ளர்
சர்க்கரை - ஒரு டம்ளர்
பட்டர் - ஐம்பது கிராம்
தண்ணீர் - 2 1/4 கப்
உப்பு - ஒரு பின்ச்
முந்திரி - ஐந்து
பாதாம் - இரண்டு
கருப்பு திராட்சை (கிஸ்மிஸ்பழம்) - எட்டு
நெய் - இரண்டு தேக்கரண்டி
அலங்கரிக்க - சிறிது (கிஸ்மிஸ்பழம்)


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் தவாவில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே தவாவில் பட்டரை போட்டு உருகும் முன் ரவையை போட்டு அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
ரவையை வறுக்க ஆரம்பிக்கும் முன் மற்றொரு பாத்திரத்தில் 2 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிறப் பொடி , ஒரு பின்ச் உப்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
ரவையை கருக விடாமல் லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பொன்னிறமானதும் ரவையை ஒரு கையால் கிளறிக் கொண்டே மறுகையால் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி கிளறி விடவும். தீயை மிதமானதாக வைத்துக் கொள்ளவும்.
கொதித்த தண்ணீரை சேர்த்து கிளறிய பின்னர் சீனியை சேர்த்து கிளறி விடவும்.
ரவை மற்றும் சீனி ஒன்றாக சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.
கலவை சூடாக இருக்கும் போதே ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி விடவும். ஆறியதும் டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டவும்.
சுவையான கேசரி கேக் ரெடி.
அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யெக்கா உங்க கேசரி கேக் மாதிரியே உங்க வீட்டு குட்டிஸும் ரொம்ப ஸ்வீட்டா அழகா இருக்காங்க:)

எல்லாம் நன்மைக்கே...

ஜலீலா அழகாக கேக் செட் பண்ணி கட் பண்ணியிருக்கீங்க.உங்க பையன்களா?சூப்பர் போட்டோ.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரிஸ்வானா,ஆசியா ஓமர் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சின்ன குழந்தைகளுக்கு அப்படியே பாதம்,பிஸ்தா,முந்திரியை பொடித்து கிளறி உருண்டைகளாக பிடித்து கூட கொடுக்கலாம்.
என் தங்கை பையன்களும் என் பையனும்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலாக்கா...உங்கள் கேசரி கேக் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி இருக்கிறேன். நன்றி ஜலீலாக்கா..

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் தயாரித்த கேசரி கேக்கின் படம்

<img src="files/pictures/aa373.jpg" alt="picture" />

கேசரி கேக் செய்து பின்னுட்டம் அனுப்பிய தாஹிராவிற்கும், அதை உடனே போட்ட அட்மினுக்கும் மிக்க நன்றி.

Jaleelakamal

Wow...my cakes look so attractive & mouth-watering.

Thanks Admin.
With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.