கிரேப் பேப்பர் பூக்கள்

தேதி: January 2, 2009

5
Average: 4.4 (5 votes)

இந்த அழகிய கிரேப் பேப்பர் பூக்களை செய்து காட்டியவர், கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா. தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

கிரேப் பேப்பர்ஸ் - விரும்பிய வண்ணங்கள்
பூ செய்யும் கம்பி
பச்சை நிற கம் டேப்
நூல்
கத்திரிக்கோல்

 

பேப்பர் பூக்கள் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயாரான நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பூவின் இதழ்கள் போல கிரேப் பேப்பரில் கத்திரிக்கோலால் விரும்பிய அளவில் மற்றும் விரும்பிய டிசைன்களில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கம்பியை எடுத்துக் கொண்டு அதன் முனையில் ஒரு சதுர கிரேப் பேப்பர் வைத்து குறுக்காக மடித்துக் கொள்ளவும். அதனை அப்படியே கம்பியில் சுற்றிக் கொள்ளவும். கம்பி முன்புறமாக நீட்டிக் கொண்டு நிற்காமல் இருப்பதற்காக இப்படி செய்து கொள்ள வேண்டும்.
கிரேப் பேப்பரில் நறுக்கி வைத்திருக்கும் இதழ்களை முன்பே சுற்றி வைத்திருப்பதை மையமாக வைத்து ஒவ்வொரு இதழ்களாக வைத்து நூலால் கட்டவும். கடைசி இதழ் வைத்து முடிந்ததும் நூலால் இழுத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
பச்சை நிற கிரேப் பேப்பரில் இலைகள் போல் நறுக்கிக் கொள்ளவும்.
இலையை செய்து வைத்திருக்கும் பூவின் அடிப்பகுதியில் வைத்து கம்பி தெரியாதவாறு கம் டேப்பை வைத்து சுற்றி விடவும்.
எளிதில் செய்யக்கூடிய கிரேப் பேப்பர் பூ ரெடி.
பூவிதழ்கள் நறுக்கும் போது ஒரங்களை வித்தியாசமாக நறுக்குவதன் மூலம் வித்தியாசமான பூக்கள் கிடைக்கும்.
இரண்டு நிறங்கள் சேர்த்து செய்தால் வித்தியாசமாக இருக்கும். உள்ளே ரோஸ் நிறமும் வெளியே வெள்ளை நிறமும் சேர்த்து செய்தால் பார்ப்பதற்கு ரோஜா பூவை போல் இருக்கும்.
விரும்பிய கலர் காம்பினேசனில் பூக்களை செய்து வைத்தால் மிக அழகாக இருக்கும். பூச்சாடியில் வைக்கும் போது மேலும் சில இலைகள் போன்று கிரேப் பேப்பரில் வெட்டி ஆங்காங்கே சொருகி விட்டால் பார்க்க இன்னும் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அருமை.ஆனால் பேப்பர் இதழ்,நூல் வைத்து கட்டுவது கொஞ்சம் புரியலை,நேரில் பார்த்தால் இலகுவாக புரியும்.அடுக்கடுக்காக இதழ்கள் சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்வி.விசா நீங்கள் செய்து காட்டிய கிரேப் பேப்பர் பூக்கள் கலர் கலராய் மிகவும் அருமையாகவும், அழகாகவும் இருக்கு.

faizakader

பூக்கள் அழகாக இருக்கின்றன விசா. நன்றாக விளங்கப்படுத்தி இருக்கிறீர்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

விசா,
கிறேப் பேப்பர் பூக்கள் கண்களைக்கவர்கின்றன. மிகமிக அழகு.
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta