ஆப்பிள் ஆரஞ்சு மிக்ஸ் ஜூஸ்

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு: 4 - 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆரஞ்சு சுளை - 3 கப் (விதை நீக்கிக்கொள்ளவும்)
ஆப்பிள் - ஓன்னரை கப் (தோல் நீக்கி கட் பண்ணவும்)
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
லெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
உப்பு - பின்ச்


 

ஆப்பிள் தோல் நீக்கி கட் பண்ணி லெமன் ஜூஸ் மிக்ஸ் செய்து வைக்கவும். (கருக்காமல் இருக்க)
ஆரஞ்சு தோல் நீக்கி சுளை எடுத்து விதை நீக்கி வைக்கவும்.
ஆப்பிள், ஆரஞ்சு பழம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக ப்ளெண்ட் பண்ணிக்கொள்ளவும்.
பின்பு வடிகட்டி கிளியர் ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.
திரும்பவும் ஆப்பிள், ஆரஞ்சு பல்ப்பை குளிந்த நீர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொண்டு வடிகட்டிக்கொள்ளவும்.
கிளியர் ஜூஸ் உடன், இரண்டாவது வடிகட்டிய ஜூஸ் சேர்த்து 4 -5 டம்ளர் அளவு தயார் செய்யவும். சர்க்கரை, லெமன் ஜூஸ், உப்பு சேர்க்கவும். டேஸ்ட் அவரவருக்கு தகுந்தபடி அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும்.
ஆரஞ்சு சுளையுடன் அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்