வாழைக்காய் பஜ்ஜி

தேதி: January 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

வாழைக்காய் - 1
கடலை மாவு - 1 கப்
மைதா மாவு - 1/2 கப்
பேக்கிங் பவுடர்(Baking powder) - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் வாழைக்காயை தோலினை சீவிய பிறகு மிகவும் மெலியதாக நீட்டாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர் , ரெட் கலர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.
பின் இத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள வாழைக்காயை ஒவ்வொன்றாக கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் போட்டு நன்றாக வெந்த பிறகு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி
இதனை சட்னி அல்லது சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் வாழைக்காய் பஜ்ஜி செய்தேன் நல்ல சுவையாகவும் குளிருக்கு இதமாகவும் இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இதற்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்தா மாவு கரைத்தீர்கள்..அப்படியென்றால் பொடட்டொ வெட்ஜெஸ் போல தின்னாக கோட் செய்யப்படுமோ

தளிகா! நான் தண்ணீர் அளந்து விடவில்லை, கையிற்கு ஓரளவு தடிப்பான பதம் வரும்வரை தண்ணீர் சேர்த்துக் குழைத்தேன். அத்துடன் வெங்காயத்தையும் இதேமுறையில் தோய்த்துப் பொரித்தேன், மிக நன்றாகவே இருந்தது. கலர் சேர்க்கவில்லை.. எழுத மறந்திட்டேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிகவும் நன்றி அதிரா. எங்கள் வீட்டில் அம்மா இப்படி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும். அதிரா அடுத்த முறை கலர் சேர்த்து செய்து பாருங்கள் ஒட்டலில் வழங்கும் பஜ்ஜி கலர் போல் இருக்கும்.
தளிகா,
நான் தான் தவறுதலாக 2 கப் தண்ணீருக்கு 3 கப் என்று டைப் செய்து இருக்கின்றேன். மாற்றிவிட்டேன். மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

.அக்கா நான் நேற்று தான் முதல் முறையா பஜ்ஜி செய்தேன். நல்லா இருந்தது. காரத்திற்கு மட்டும் (காய்ந்த மிளகாய்,சீரகம்,சோம்பு) சேர்த்து திரித்த தூள் சேர்த்தேன். நன்றி அக்கா

அரசி,
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்