வறுத்த அரிசி பொடி

தேதி: January 3, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 1 கப்
பூண்டு - 2 பல் தோலுடன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - 1 தேக்கரண்டி


 

முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு அதே கடாயில் பச்சரிசியை நன்றாக 2 - 3 நிமிடம் வறுக்கவும். (அரிசி கொஞ்சம் பொரிந்து இருக்கும்.)
வறுத்து வைத்துள்ள பச்சரிசியை சிறிது நேரம் ஆறவிடவும்.
பின் பச்சரிசி, காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது வறுத்த பச்சரிசி பொடி ரெடி.


இந்த பொடியினை எந்த வித பொரியல் செய்யும் பொழுது கடைசியில் தூவ மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கீரை பொரியலுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்