பொட்டுக்கடலை துவையல்

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் - 1/4 கப்
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 1
கல் உப்பு - 1 தேக்கரண்டி


 

பொட்டுக்கடலை, தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். (தேவையானல் தண்ணீர் சேர்க்கவும்)
இப்பொழுது பொட்டுக்கடலை ரெடி. இதனை குழம்புடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


இந்த பொட்டுக்கடலை துவையலை புளி குழம்பு, காரக்குழம்பு வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
இதனை தாளிக்க கூடாது. இந்த துவையலை அம்மியில் அரைத்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீதாச்சல், பொட்டுக்கடலைத் துவையல் அரைத்தேன், நன்றாகயிருந்தது. நானும் இந்தத் துவையல் அடிக்கடி அரைப்பேன், எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இது பேவரிட். இதிலும் பூண்டிற்கு பதில் சின்னவெங்காயம் சேர்த்துச் செய்தேன். பாஸ்கரிற்கு பூண்டைவிட வெங்காயம் சேர்த்துச் செய்தால் விரும்பிச் சாப்பிடுவான். நன்றிப்பா.

அன்புடன்:-)......
உத்தமி:-)

மிகவும் நன்றி. எங்கள் வீட்டில் அம்மா அடிக்கடி இதனை செய்வார்கள்..மிகவும் சுவையாக இருக்கும்..
நானும் அடுத்த முறை சின்ன வெங்காயம் சேர்த்து செய்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அக்கா, இந்த பொட்டுக்கடலை துவையல் எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அக்கா நான் பூண்டோடு, சின்ன வெங்காயமும் சேர்த்து அரைத்தேன். நன்றாக இருந்தது. இதை நேற்று இரவு இட்லிக்கு செய்தேன். நன்றி அக்கா.

மிகவும் நன்றி அரசி.
நான் இதுவரை வெங்காயம் சேர்த்து செய்ததில்லை. கண்டிப்பாக செய்து விட்டு சொல்கிறேன். என்ன தங்கச்சி சரி தானே.
செய்து விட்ட பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்ததில் ருசியோ ருசி.காரக்குழம்பிற்கு சூப்பர் காம்பினேஷன்.

மிகவும் நன்றி மேனகா.
ஆமாம் சூப்பர் காம்பினேஷ்ன் போங்க..
அன்புடன்,
கீதா ஆச்சல்