ஸ்டஃப்டு மஷ்ரூம் (Stuffed Mushrooms)

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஷ்ரூம் - 15 பெரியது
இத்தாலியன் தக்காளி சாஸ் - 1 கப்
இத்தாலியன் ப்ரெட்க்ரம்ஸ் - 1/2 கப்
பார்மஜான் சீஸ் - 1/4 கப்
மொசாரில்லா சீஸ் - 1 கப்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி


 

அவனை 375 F முற்சூடு செய்யவும்.
முதலில் மஷ்ரூமை சிறிது துணியை வைத்து துடைத்து கொள்ளவும். அதனுடைய தண்டு பகுதியை எடுத்து விடவும். இப்பொழுது குழி போல் காணப்படும்.
மஷ்ரூமைகளை ஆலிவ் ஆயிலில் பிரட்டி கொள்ளவும்.
இத்தாலியன் ப்ரெட் க்ரம்ஸை பார்மஜான் சீஸுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த ப்ரெட்கரம்ஸை மஷ்ரூமின் குழிப்பகுதியில் நிரப்பவும்.
இப்படியே செய்து பின்னர் அனைத்து மஷ்ரூமை பேக்கிங்கு ட்ரெயில் அடுக்கவும்.
அதன் பின் அடுக்கி வைத்துள்ள மஷ்ரூம்கள் மேல் இத்தாலியன் சாஸை ஊற்றி நன்றாக பரப்பி விடவும்..
பிறகு அதன் மேல் மொசாரில்லா சீஸை தூவுவவும்.
இப்பொழுது முற்சூடு செய்துள்ள அவனில் 375 F யில் 20 - 25 நிமிடம் வைக்கவும்.
இப்பொழுது சுவையான ஸ்டஃப்டு மஷ்ரூம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்