மாதுளம் பாஸந்தி

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாதுளம் பழம் உரித்தது- 1/2 கப்
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
முந்திரி - 1 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி


 

முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலினை ஊற்றி சுண்ட காய்ச்சவும். 3 கப் பால் 1 கப் பாலாக மாறும் வரை காய்ச்சவும்.
அதன் பின் அதில் சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு முந்திரி, பாதாம் பருப்பு மற்றும் மாதுளம் சேர்த்து ப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஜில் என்று பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா மாதுளம் பாஸந்தி செய்தேன். பிள்ளைகள் ஃப்ரூட் சாலட் போல் நல்லா இருக்குமா என்று கூறி விரும்பி சாப்பிட்டார்கள். ஜெல்லி மட்டும் கூட சேர்த்தேன். நன்றி அக்கா

அரசி,
மிகவும் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு இந்த ஆன்டி நன்றி சொன்னாங்க என்று சொல்லவும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்