தயிர் வடை குழம்பு

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க தேவையானவை:
புளித்த தயிர் - 2 கப்
பச்சரிசி - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வடை செய்ய:
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

முதலில் பச்சரிசி மற்றும் துவரம் பருப்பினை 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். உளுத்தம் பருப்பினை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பினை தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக மைய அரைத்து சிறிது உப்பு சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.
பின் ஊற வைத்துள்ள பச்சரிசி, துவரம் பருப்பு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி வெட்டி வைக்கவும். பூண்டினை நசுக்கி வைக்கவும். இஞ்சினை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வடைகளை சுட்டு எடுத்து வைக்கவும்.
பின் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் சீரகம் போடவும். அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மோரினை இதில் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.
கொதி வந்தவுடன் பூண்டு, இஞ்சி, பெருங்காயம் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைக்கவும். கடைசியில் வடைகளை இந்த குழம்பில் போடவும்.
இப்பொழுது சுவையான தயிர் வடை குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்