சமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 4, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி -5 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை கதீஜாவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (13/01) முடிவடையும். புதன்கிழமை(14/01), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

எப்படி இருக்கீங்க்க?நான் அனுப்பிய மெயில் பார்த்தீர்களா?மகன் நலமாக இருக்கிறாரா?அக்கா நீங்கள் தேடிய த்ரெட் இதோ!அப்புறம் அதிரா அண்ட் ரேணு எப்படி இருக்கீங்க?இப்பொழுது ஒருவழியாக எனது கிச்சன் சரியாகிட்டது இருந்தாலும் இன்னும் டைல்ஸ் ஒட்டவில்லை அது மட்டுமே பாக்கி! நானும் கதீஜாவின் குறிப்பை செய்கிறேன்!

அதிரா எப்படி இருக்கீங்க?நான் கதீஜாவின் சமைய்யல் குறிப்பிலிருந்து வாடாவும் சீர் குருமாவும் செய்தேன் ,நன்றாக இருந்தது!இனி முடிந்தால் செய்வேன்!சீர் குருமாவின் படமும் எடுத்து வைத்துள்ளேன் பிறகு அனுப்புவேன்!

மிக்க நன்றி கதிஜா

அதிரா, கணக்கரே கோவா பொரியல் செய்துள்ளேன் இன்று , ரொம்ப அருமை வித்தியாசமான சுவை.

ஜலீலா

Jaleelakamal

இன்னைக்கு நோ சமையல். டாடா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் எல்லோர் வரவும் நல்வரவாகுக!!!!

சுவீட் வொயிஸ் இலாவே.... மிக்க நன்றி.

மீனா, . கருவா என்றால் கறுவாப்பட்டை (சினமன்) , கீரைப்பொடி எனக்குத் தெரியவில்லை.

கீதாச்சல் மிக்க நன்றி.

ரஸியா... கேட்க சந்தோஷமாக இருக்கு, கிச்சின் திருத்தியாச்சோ? சமைத்ததுக்கும் பங்குகொண்டதற்கும் மிக்க நன்றி.

ஜலீலாக்கா, உடம்பு சுகமில்லை என்றீங்கள் அதோடு செய்து சொன்னதற்கு மிக்க நன்றி... இன்னும் முடிந்தால் செய்யுங்கோ.

வனிதா டாடா எல்லாம் சொல்லப்படாது தெரியுமோ?

இன்று என் சமையல் தேங்காய்ச் சோறு.
ரேணுகா எங்கே இன்னும் காணவில்லை உங்களை, நலமாக இருக்கிறீங்களோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அக்கா நான் சிறு பயரு உருண்டை செய்தேன். என்னோட கணக்கில சேர்த்துக்கோங்க. நன்றி அக்கா.

அதிரா வந்துட்டேன்,கொஞ்சம் பிஸியாகிட்டேன்,அதான் தாமதம்,நான் செய்தது ஸ்பைசி டொமேட்டோ ரைஸ், மக்ரோனி,இனி லீவு முடிந்துதான் வருவேன்,ஆனால் கட்டாயம் எல்லாருடைய பதிவையும் பார்த்து கொண்டுதான் இருப்பேன்,

நான் சமைக்கலை என்றால் அபுதாபி வருவீங்களா??ரெம்ப நல்லது இனிமேல் நான் சமைக்காமல் இருக்கவா??இதை என் பையனிடம் சொன்னேன்,நான் சமைக்க போனால் ஏன் அம்மா சமைக்கற சமைச்சா அதிரா ஆண்ட்டி வரமாட்டாங்க என்றான்,அது மட்டுமா என்னவரிடம் கிளம்புங்க அப்பா அதிரா ஆண்டி வீட்டுக்கு போகனும் என்று ஒரே வம்பு.நான் அதிரா ஆண்டி யூ.கேல இருக்காங்கடா எப்படி போறது ன்னதும்,இப்பவே வா யூ.கே போலாம் என்றான்,எப்ப யூ.கே வர.??

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா, ரேணு எப்படி இருக்கீங்க? நான் இதுவரை செய்தவை எக் கேப்ஸிகம் மசாலா, வெஜிடபுள் கட்லெட்.

அதிரா,ரேணுகா நலமா?

இன்று பிரெட் புடிங் செய்தேன்.வித்தியாசமான சுவையாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

என் கணக்கு
இன்று பொட்டுகடலை சட்னி செய்தேன். கோதுமை தோசைக்கு நல்லா இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்