சமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 4, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல் இது பகுதி -5 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும்.உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை கதீஜாவின் குறிப்புக்கள் ஆரம்பமாகிறது, வரும் செவ்வாய்க்கிழமை (13/01) முடிவடையும். புதன்கிழமை(14/01), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

நன்றி,
"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால் எதையும் சாதிக்கலாம்"

புதினாசட்னி,காய்கறிசாம்பார்,ஜவ்வரிசிப்பாயாசம்,
பச்சைப்பட்டாணிக்கிரேவி
இவ்வளவுதான் சைவச்சாப்பாடு தேடிச்செய்தேன்.
கோவிக்கவேண்டாம்.
ஸ்டெப் பை ஸ்டெப்பா படம் எடுக்க எனக்கு இன்னொருவர் உதவிதேவை.எடுத்துப்பார்த்தேன்.கஸ்டமாக இருக்கிறது.காமரா ஸ்ராண்டில் பூட்டிவிட்டு எடுத்துப்பாத்ததில் என் காய்கறி சாம்பார் காய்கரி சாம்பல் ஆகீட்டுது.அதனால் முடிவில் எடுத்துள்ளேன்.

சுரேஜினி

நேற்று தாய் ஃபிஷ் கிரேவி செய்தேன்.கணக்கில் சேர்த்துடுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா நான் நேற்று மில்க் சைனா கிராஸ் செய்தேன். என் கணக்குல சேர்த்துக்கோங்க. அக்கா எங்க ஊரு சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா? அக்காஸ் ஐந்தாம் தேதிக்கு முன்னால் செய்ததை போடலாமா? நன்றி அக்காஸ்.

அக்காஸ் பொட்டுக்கடலை சட்னி செய்தேன். என் கணக்கில சேர்த்துக்கோங்க. நன்றி அக்கா.

எல்லோருக்கும் நன்றிகள்.
அரசி மிக்க நன்றி... இன்னும் முடிந்தால் செய்து சொல்லுங்கோ...

ஐயையோ ரேணுகா, உங்கள் குட்டி மகனின் கதையைக் கேட்க எனக்கு பார்க்க வேணும் என்ற ஆசை வந்துவிட்டது. இப்படியெல்லாம் கதைக்கிறாரா? அம்மாதான் இப்படிக் கதைக்கப் பழக்கியிருப்பீங்கள் என்ன?
இனிச் சொல்லுங்கோ பத்துக் குறிப்பெண்டாலும் செய்தால்தான் அதிரா ஆண்ரி வருவேன் என்று:)
என்ன அடிக்கடி உங்களுக்கு விடுமுறை வருகிறதே:) பொறாமையா இருக்கு.

மாலி, வத்சலா... இலா.. மிக்க மிக்க நன்றி. இலா எப்பத்தான் நாங்கள் எங்கள் சங்கத்தைத் தொடங்குவது?

சுரேஜினி, மிக்க நன்றி... பறவாயில்லை முடிவிலாவது படமெடுத்தீங்களே மிக்க சந்தோஷம்... முடிந்தால் இன்னும் செய்யுங்கோ...

ஆசியா மிக்க நன்றி.

அரசி... உங்களூர் சாப்பாடா அனுப்பினனீங்களா? கிடைக்கவே இல்லை:)
மன்னிக்கவேணும் 5 ம் திகதி செய்ததிலிருந்துதான் நாங்கள் கணக்கெடுப்போம்... மிக்க நன்றி

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அக்கா நான் இன்று ஸ்பைசி டொமொட்டா ரைஸ் செய்தேன் நன்றாக இருந்தது. நன்றி அக்காஸ்.

இன்று கதீஜாவின் சமையலிருந்து வாழைப்பூவடையும்,மட்டன் சாப்ஸும் செய்தேன்!இரண்டுமே அருமைய்யாக இருந்தது!

அதிரா,ரேணுகா இன்று எழுமிச்சம்பழம் ரசம் செய்தேன்,மிகவும் சுவையாக இருந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அதிரா,அக்கவுண்ட் ரேணு நான் செய்தது வெங்காய சட்னி,தூனா மீன் வதக்கல்,பொட்டுக்கடலை சட்னி.

பல பல நன்றிகள் அனைவருக்கும்....

ரஸியா, வத்சலா, மேனகா மிக்க நன்றி.

இன்னும் 3 நாட்களேதான் இருக்கிறது... எல்லோரும் வாங்கோ..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்