முருங்கைக்காய் பொரியல் (சதை பகுதி)

தேதி: January 5, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 10
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

முதலில் முருங்கைக்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காயை தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைக்கவும்.
நன்றாக வெந்த பிறகு முருங்கையை தண்ணீரில் இருந்து வடிக்கட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.
முருங்கைக்காய் சிறிது ஆறியவுடன் அதனுள் இருக்கும் சதை பகுதியை ஒரு ஸ்பூன் அல்லது கத்தி வைத்தோ எடுத்து கொள்ளவும். இப்பொழுது முருங்கை சதை பகுதி தயார்.
இப்பொழது வெங்காயத்தை பொடியாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்தும் கடுகு போட்டு தாளித்து பின்னர் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதை பகுதியும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி 6 – 8 நிமிடம் வதக்கவும்.
இப்பொழுது சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி.


குழந்தைகளுக்கு முருங்கைக்காயை இப்படி செய்து கொடுத்தால் கஷ்டம் இல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.
முருங்கை அதிகம் கிடைக்கும் பொழுது இப்படி செய்யாலாம்.

மேலும் சில குறிப்புகள்