ஈஸி சிக்கன் ஃபிரை

தேதி: January 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. சிக்கன் - 1 கிலோ
2. வெங்காயம் - 2
3. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. பிரியாணி இலை - 1
5. பட்டை, லவங்கம்
6. ஏலக்காய் - 3
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லி தூள் - 2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
12. உப்பு


 

கோழி எலும்போடு பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும்.
இதில் சிக்கன் சேர்த்து மூடி வேக விடவும். [சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானது. சில நேரம் சிக்கனில் நீர் விடா விட்டால், 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.]


மிகவும் ஸாஃப்டான, சுவையான சிக்கன் தயார். விரும்பினால் கரம் மசாலா முதலில் சேர்க்காமல் கோழி வெந்ததும் சேர்த்து மேலும் 5 நிமிடம் அடுப்பில் வைத்து கிளரி எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

AC chicken fry?! :-))

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

வனி ஈசி சிக்கன் பிரையா?ஏசி சிக்கன் பிரையா?குழப்பத்தை தீருங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இந்த பிரை செய்து ஏசி ரூமில் சாப்பிட வேண்டும். ஆகவே தான் ஏசி சிக்கன் என்ற பெயர் என்று நினைக்கிறேன். ஹி.ஹி

வாணி..நான் எஸ்கேப்.

அப்பப்பா.... கொஞ்சம் ஏம்மாந்தா உட்டு கலாய்க்கிறது. சரி செய்தாச்சு. :D ஹிஹீ.. சும்மா சொன்னேன், கவனிக்காம அடிசிட்டேன், சொன்னதுக்கு நன்றி. இப்ப திருப்தியா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்ல வனி,ஏஸி சிக்கன் என்று பார்த்ததும்,ஏஸ்ஸிக்கும் சிக்கனுக்கும் என்ன சம்பந்தம் என்று என்னஎன்னவோ தின்கிங் பன்னிட்டேன்,உள்ள வந்து படிச்சதும் புரிஞ்சுடுச்சு இது ஏதோ மிஸ்டேக் தான்னு,

இருந்தாலும் ஈசிய விட ஏஸி தான் சூப்பர்,கட்டாயம் சிக்கன் வாங்கினா இந்த ஏசி (ஸாரி ஈசி) சிக்கனை செய்துட்டு சொல்றேன்,அதுவரைக்கும் அழாமல் இந்தாங்க குச்சிமிட்டாய் சாப்பிட்டுகிட்டு சமத்தா இருக்கனும் ஓ.கே

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எனக்கு குச்சி மிட்டாய் வேணாம்... தேன் மிட்டாய் தான் வேணும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.... இதுவரை 2 விருந்துக்கு செய்து அபார வெற்றி பெற்றது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ சகோதரி!!
இது மைக்ரோவேவ் சமையல் தானே? கொஞ்சம் குழப்பத்தை தீர்த்தால் நல்லது.
மைக்ரோவேவ் முன்னாடி மண்டை காய்ஞ்ச்சுட்டிருக்கேன்.ஏன்னா நான் சமையல்ல கிண்டர்கார்டன் கிராஜுவேட். ஹிஹி....
நட்புடன் ஜுனைத்

நட்புடன் ஜுனைத்

இல்லை தோழி... இது மைக்ரோவேவ் சமையல் அல்ல. சாதாரனமா அடுப்பில் செய்ய கூடியது, தாராலமா முயற்சி பண்ணுங்க, நானும் சமையல்ல கத்துகுட்டி தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, இன்றைய மதிய சமையலுடன் ஈஸி சிக்கன் ஃப்ரையும் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது வனிதா! நன்றிப்பா குறிப்பிற்கு!

நல்லா இருந்துச்சா? மிக்க நன்றி கீதா. :) இது எனக்கு ரொம்ப பிடித்த வெரைட்டி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்களுக்கு பிடித்த இந்த டிஷ் இனி எனக்கும் என் பையனுக்கும் பிடிக்கும்,அவர்தான் சாப்பிடல,செய்த அன்று அவர் வரவில்லை,அதனால் மீண்டும் ஒரு முறை செய்யனும்,ஏசி போட்டுவிட்டுதான் இந்த சிக்கனை சாப்பிட்டேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி ரேணுகா. நான் நேற்றும் பார்ட்டிக்கு இதை செய்து இருந்தேன்.... எல்லோருக்கும் பிடித்திருந்தது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா