வாழைக்காய் புட்டு

தேதி: January 6, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 2 (பெரியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயப்பொடி - பின்ச்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

வாழைக்காயை தோலுடன் பாதியாக குறுக்கில் கட் பண்ணி தண்ணீர் உப்பு சேர்த்து ஓரளவு வேக வைக்கவும்.
வெந்த பின்பு தோல் எடுத்து, அதனை துருவிக்கொள்ளவும்.
வாணலியில் (நாண்ஸ்டிக்) எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும், பின்ச் பெருங்காயப்பொடி சேர்க்கவும். துருவிய வாழைக்காயை சேர்த்து பிரட்டவும். தேங்காய்த்துருவலை சேர்த்து இறக்கவும்.
சுவையான வெள்ளை வெளேர் வாழைக்காய் புட்டு ரெடி.


இது சாதம், வற்றல் குழம்பு, புளிக்குழம்பு உடன் சாப்பிட நன்றாக இருக்கும். அப்பளம் சுட்டு அல்லது பொரித்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்