Steps to follow before getting pregnant

Hi Everyone,

I have joined this group today only. Can anyone advise me on the steps to follow before getting prgnant?

1)முதலில் டென்டல் செக் அப் செய்யவும்...ப்ரெக்னன்ட் ஆகிட்டால் பல் சம்மந்தமான ப்ரச்சனை வருவது சகஜம் ஆனால் ட்ரீட்மென்ட் செய்வது கொஞ்சம் ரிஸ்க்
2)உடம்பு எடை கரெக்டான்னு பாருங்க..கூடியிருந்தா குறையுங்க குறைந்திருந்தா கூட்டுங்க..உடல் வாகே இளைச்சுதானென்றால் ஒன்னும் செய்ய வேண்டாம் விட்டுடுங்க..உடம்பை குறைச்சு ஒரு 2 மாசத்துக்காவதே அதே எடையில் மெயின்டெயின் பன்னி பீரியட்ஸ் சரியா வந்தபிறகு முயற்சிக்கலாம்
3)கான்ட்ரசெப்டிவ் பில்ஸ்- ப்ரெக்னன்ட் ஆகாம இருக்க மருந்து சபபிட்டுக் கொண்டு திடீர்னு குழந்தைக்கு முயற்சி செய்வது நல்லதல்ல ஒரு 3 மாதம் பொறுத்தபின் முயற்சிக்கலாம்
4)சத்தான உணவு பழக்க வழக்கங்கள் கொண்டு வர வேண்டும் ..
5)ஃபாலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிட தொடங்கினால் மிக மிக நல்லது
6)மனாழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சிக்கவும்

Thanks for your response!

I have got normal weight & not using any pills.
சத்தான உணவு பழக்க வழக்கங்கள் கொண்டு வர வேண்டும் - can you please tell me in detail.

because i was pregnant before a year, and just before 20 days of my due date i delivered(normal) a boy baby but he was no more, doctors couldnt guess the reason for it, so i am very scared this time. i dont want anything to happen this time. Thats why i am getting well prepared this time.

சகோதரி விஜயா, எனக்கும் உங்களுக்கு நடந்ததைப் போல் மூன்று தடவை நடந்தது. என் அனுபவத்தில் கூறுகின்றேன். முதலில் மனரீதியாக நீங்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். நடந்தவற்றை நினைத்து வேதனைப்படுவதோ பயப்படுவதோ அறவே கூடாது.
சாப்பாட்டு விடயத்தில் நல்ல காய்கறிகள், பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும்.
முக்கியமாக மனதை மகிழ்வாகவும் ரிலாக்ஸாகவும் வைத்திருக்கவும்.

சகோதரி தளிகா கூறியதுபோல் Folic Acid மாத்திரையைத் தினமும் எடுக்கவும்.

சற்றும் எதிர்பார்க்கவில்லை நீங்கள் எழுதியது தினும்மென ஆகிவிட்டது..I am so sorry for ur loss
ஆனால் அந்த கவலையை விடுங்க பலபல காரணங்களால் இறந்து போயிருக்கலாம்.முன் நடந்த சோதனை திரும்ப வந்துவிடுமோ என்று பயப்பதுமனித இயல்பு ஆனால் வேறு பக்கம் மனதை திசை திருப்பலாம் அதனால் அதனை மறக்கலாம்.
முடிந்தால் யோகா சென்டெருக்கு போங்க..முடிந்தால் என்றில்லை கட்டாயம் போங்க..மனதை ஒரு நிலைப்படுத்த ரொம்ப உதவும்..பெரிய மீன் தொட்டி வாங்கி மீன் வளர்த்துங்க அதுங்களை பார்த்துட்டே இருப்பதில் ஒரு ஆனந்தமே தனி இது அனுபவம்
எதனால் குழந்தை இறந்தது என்பதற்கு நீங்கள் சற்றும் காரணமல்ல..அதனை நீங்கள் நினைத்தாலும் முயற்சித்தாலும் தடுத்திருக்கவும் முடியாது..
அதனால் காய்கறி பழங்கள் இனிப்பு சேர்க்காத பழ ஜூஸ்கள், மற்றபடி நுங்களுக்கு பிடித்த எதுவும் சாப்பிடலாம்...சத்தாக சாப்பிடுகிறீர்களோ இல்லையோ உடலுக்கு கேடு தரும் சாக்லேட்,ஏரேடெட் ட்ரின்க்ஸ்,போன்ற எதையும் தவிர்த்து விடுங்கள்..மத்தபடி உங்களுக்கு பிடிச்ச எதையும் சாப்பிடுங்க
சும்ம இருக்காதீங்க முடிந்தவரை யாருடைய துனையையாவது வைத்துக் கொண்டே அரட்டை போட்டுக் கொண்டே இருங்க..நல்லதே நடக்கட்டும் என ப்ராத்திக்கிறேன்..

SIVAKAVI
டியர் விஜயா!
நீங்கள் ஒரு நல்ல கைனகாலஜிஸ்ட் ஐ கன்சல்ட் செய்வதுதான் நல்லது.அவரே ஃபாலிக் ஆசிட் மாத்திரைகளை ப்ரிஸ்க்கிரைப் செய்வார். கவலை இன்றி ரிலாக்ஸ்டாக இருங்கள்.எல்லாம் நல்லதே நடக்கும். ஆல் தி பெஸ்ட் விஜி.

anbe sivam

எனக்கு தெரிந்ததுகளையும் அவசரமா சொல்லீட்டு போகலாம் எண்டு வந்திட்டன்.விரும்பினதையும் தேவையான ஆலோசனைகளையும் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கோ.

1.குழந்தை வேணுமென்று நினைத்தாலே 1mg போலிக் அசிட் எடுப்பதற்கு நீங்கள் டாக்டரை ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை.
பாமசிக்கு சென்று நீங்களாகவே வாங்கி நாளுக்கு ஒன்றாக எடுக்கத்தொடங்குங்கள்.இதற்கு எந்தச்செக்கப் ம் தேவையில்லை.
அதன்பின் போலிக்கசிட்டின் வீதம் உங்களுக்கு கூடுதலாக தேவையா என்பது உங்கள் ரிப்போட்ஸ் ன் படி டாக்டர் எழுதித்தருவார்.

2.விரும்பினால்அடுத்து basal body temperature வேண்டி அதனுடன் தினமும் பதியக்கூடிய மாதிரி சாட்
இருக்கும். [அது எப்படி உபயோகிப்பது ஏன் பாவிப்பது அதனால்
என்ன நன்மை எல்லாம் உதாரணங்களுடன் கூகிள் செய்து எடுத்துக்கொள்ளலாம்.
http://www.babycenter.ca/preconception/suspectingaproblem/chartingyourtemperature/
சாட் பிரிண்ட் எடுப்பதாக இருந்தால்http://www.4women.gov/Pregnancy/tools/bbt-chart-blank.pdf

3.அடுத்து நீங்கள் விரும்பினால் ஹோம் பிரக்னன்சி செய்வதுபோல் கருமுட்டை
தயாராக இருந்தால் + ம் இல்லாவிட்டால் - ம் காட்டுவதற்கும் Ovulation Predictor Kits நீங்களாகவே பாமசியில்
வாங்கி் டெஸ்ட் செய்து கொள்ளலாம் நாடுகளைப்பொறுத்து.
http://www.early-pregnancy-tests.com/ovulationtests.html

4. எண்ணெய் குறிப்பாக வெஜிடபிள் ஒயில் பாவிப்பதைக்குறைக்கவும் .

5.ஒவ்வொருநாளும் குறிப்பிட்டதூரம் நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

6.அடுத்து தாம்பத்தியத்தின்பின் சுத்தமாக இருப்பதாக நினைத்து ஓடிச்சென்று குளிக்க கூடாது.அதிலும் சுடுநீர் உபயோகிப்பது கூடவே கூடாது

7.குழந்தை கிடைப்பதற்கு ஏற்படும் சிறிய தடைகளை கருத்திற்கொண்டு அதை ஒரு குறையாக நினைக்க கூடாது அது மற்றவர்களையும் இந்த விடயத்தில் அதிக உரிமை எடுக்க வைத்து வீண் மனக்கஸ்டங்களை தருவிக்கும்.தேவையில்லாத பயம் சிந்தனைகள் வெறுப்புகள் என்பன ஒழுங்கில்லாத பீரியட்டுக்கு வழிகோலிவிடும்.

8.நிறையத்தண்ணீர் பருகுங்கள்.நல்ல வெளிச்சத்தை[சூரிய ஒளி] ஒவ்வொருநாளும் பாருங்கோ.

9.நான் அதிகம் அலட்டுறேனா எண்டு சொல்லுங்கோ இல்லையெண்டா வேற ஏதாவது படிச்சா அறிஞ்சா வந்து சொல்லுறன்.

சுரேஜினி

சுரேஜினி ஹேட்ஸ் ஆஃப் டூ யூ...அழகா முத்து முத்தா எழுதியிருக்கிறீங்கோ..அதுவும் முக்கியமான பாயின்ட்டா தேர்ந்தெடுத்து.அசந்து விட்டேன்

Hello Everyone,

Thanks for all your response!

I am planning to go to Yoga from Monday, lets see how it goes....

Sarojini
your tips were very good and it will be useful not only for me, for many actually.......
and i have consulted my gynac she had given me Folic acid. started having it.

i never expected these many responses, i think this forum is always active, i liked it a lot....

thanks ladies....

can anyone please tell me how to write in Tamil?

உங்கள் கேள்வியின் கீழ் எழுத்துதவி என்று இருக்கும் அதை பயன் படுத்தி தமிழில் type செய்யவும்

மேலும் சில பதிவுகள்