ஸ்சினமன் ரோல்(Cinnamon Rolls)

தேதி: January 6, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 3 கப்
ஈஸ்ட்(Yeast) - 1 சிறிய பாக்கெட்
சர்க்கரை - 1/4 கப்
பட்டர் - 2 மேசை கரண்டி + 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
ஸ்சினமன் தூள்(Cinnamon powder) - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய பட்டர் - 2 தேக்கரண்டி


 

முதலில் ஈஸ்டினை 2 தேக்கரண்டி சுடுதண்ணீருடன் சேர்த்து கலக்கவும். அதனை அப்படியே 2 - 3 நிமிடம் வைக்கவும்
பிறகு மைதா மாவு, சர்க்கரை, பட்டர், உப்பு மற்றும் ஈஸ்ட் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதனை அப்படியே 2 மணி நேரம் வைக்கவும். ஈஸ்ட் சேர்த்தால் மாவு இரண்டு பங்காக உப்பி இருக்கும்.
ஸ்சினமன் தூள், சர்க்கரையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் மாவினை சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டவும்.
பிறகு அதின் மேல் உறுக்கி வைத்துள்ள பட்டரினை தடவவும்.
பின்னர் கலந்து வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் ஸ்சினமன் தூளினை இதன் மேல் பரப்பி விடவும்.
இப்பொழுது இதனை அப்படியே திரும்பவும் சுற்றிக் கொள்ளவும்.
பிறகு சிறிய சிறிய துண்டுகளாக 8 - 10 துண்டுகள் வெட்டி கொள்ளவும்.
பிறகு ஒரு பேக்கிங் பேனில் அடியில் பட்டர் தடவி இதனை அடுக்கி அரை மணி நேரம் வெளியில் வைக்கவும்.
இப்பொழுது அவனை 350 F முற்சுடு செய்யவும்
பின்னர் இதனை அவனில் 20 - 25 நிமிடம் வைக்கவும்.
இப்பொழுது சுவையான ஸ்சினமன் ரோல் ரெடி. இதனை சர்க்கரை ஐஸிங்குங்கால் அலங்கரித்து பரிமாறவும்.


இது ஒரு நல்ல டெஸர்ட்(Dessert). இதனை பெரும்பாலானோர் காலை நேர உணவாகவும் சாப்பிடுவார்கள்.
சர்க்கரை அதிகம் சாப்பிடுவர்கள் கொஞ்சம் அதிகம் சர்க்கரை கூட சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்