ஆப்பிள் ஃபிரிட்டர்ஸ்

தேதி: January 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள் - 1 1/2 கப்
2. மைதா மாவு - 1 கப்
3. பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
4. உப்பு
5. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
6. முட்டை - 1 (நல்லா அடிச்சது)
7. பால் - 1/2 கப்


 

முட்டை, பால் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு கலந்து, அதில் அடித்த முட்டை, பால் சேர்க்கவும்.
இதில் ஆப்பிள் துண்டுகள் சேர்த்து ப்லென்டரில் அடிக்கவும். இதை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் ஊற்றி சுட்டு எடுக்கவும்.


சர்க்கரை ருசிக்கு தகுந்த மாதிரி சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனிதா
இந்த ஆப்பிள் ஃபிரிட்டர்ஸ் செய்தேன். என் பிள்ளைங்க நல்லா சாப்பிட்டாங்க. ரொம்ப சுலபமான செய்முறை.குழந்தைகள் ரெசிபீஸ் நிறைய கொடுப்பதுக்கு நன்றி.

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

நன்றி கிருத்திகா.உங்களது பின்னூட்டம் படித்து சந்தோஷம் ஆயிட்டுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா